சீனாவில் ஜப்பான் கடல் உணவுகளுக்கு தடை: இருநாடுகளுடையே வெடித்த மோதல்
ஜப்பான் நாட்டின் கடல் உணவிற்கு சீனா தடை விதித்துள்ளது.
எச்சரிக்கை விடுத்த ஜப்பான்
சீனாவின் அண்டை தீவு நாடான தைவானை தங்கள் நாட்டின் ஒருப் பகுதி என கூறிக்கொண்டு தைவான் சர்வதேச கடல் பிராந்தியத்திற்குள் தொடர்ந்து சீனா போர் விமானங்களையும், போர் கப்பல்களையும் அத்துமீறி இயக்கு வருகிறது.
இதற்கு அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகள் சில எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தைவான் பிராந்தியத்திற்குள் அத்துமீறும் சீனாவின் செயலுக்கு ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதில் தைவானை சீண்டினால் சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த சீனா, ஜப்பானின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன் சீன குடிமக்கள் யாரும் ஜப்பானிற்கு பயணிக்கவோ அல்லது தங்கியிருக்கவோ வேண்டாம் என்று அறிவித்துள்ளது.
கடல் உணவுகள் வேண்டாம்
சீனாவின் மிகப்பெரிய உணவு ஆதாரமாக திகழும் கடல் உணவுகளான (மீன்கள், இறால்கள், கடல் நண்டுகள் ஸ்குவிட்கள்) போன்றவை சீனாவில் இருந்து அதிகளவு இறக்குமதி செய்யப்படுகிறது.

கடல் உணவுகள் தொடர்பில் இருநாடுகள் இடையே ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறுகிறது.
இந்நிலையில் சீன அரசாங்கம் ஜப்பான் கடல் உணவுகளுக்கு நிரந்தர தடை விதித்துள்ளது.
கடல் உணவுகளுடன் ஜப்பான் நாட்டின் சீனிமாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |