மணிக்கு 16,000 பயணிகள்... உலகிலேயே மிகப்பெரிய ரயில் நிலையம்: மிரளவைக்கும் அதன் செலவு
சீனாவில் ஜூன் மாதம் திறக்கப்பட்ட இரயில் நிலையம் ஒன்று உலகிலேயே மிகப் பெரியது என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
ஐந்து மடங்கு பெரியது
பல பில்லியன்கள் செலவில் கட்டி முடிக்கப்பட்ட இந்த இரயில் நிலையமானது மணிக்கு பல ஆயிரம் மக்களை கையாள முடியும். இந்த நிலையம் தென்மேற்கு சீனாவில் உள்ள சோங்கிங் நகருக்கு வெளியே அமைந்துள்ளது மற்றும் 15 நடைமேடைகள் மற்றும் 29 தடங்களைக் கொண்டுள்ளது.
தோராயமாக 5.82 பில்லியன் பவுண்டுகள் செலவில் இந்த ரயில் நிலையம் கட்டப்பட்டுள்ளது. 1.22 மில்லியன் சதுர மீற்றர் பரப்பளவு கொண்ட இந்த ரயில் நிலையமானது நியூயார்க்கில் அமைந்துள்ள கிராண்ட் சென்ட்ரலை விட ஐந்து மடங்கு பெரியதாகும்.
அதாவது இந்த ரயில் நிலையத்திற்குள் 170 கால்பந்து மைதானங்களை நிறுவலாம். சோங்கிங் நகரில் இருந்து பயணிகள் Chongqing–Xiamen, Shanghai–Chongqing–Chengdu, மற்றும் Chongqing–Wanzhou நகரங்களுக்கு பயணிக்கலாம்.
எட்டு மணி நேரத்தில்
இந்த இணைப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால், பயணிகள் பெய்ஜிங், ஷாங்காய், குவாங்சோ மற்றும் ஷென்சென் ஆகிய முக்கிய நகரங்களுக்கு ஆறு முதல் எட்டு மணி நேரத்தில் சென்றுவிடலாம்.
ரயிலுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கும் 5000 இருக்கைகள் உட்பட அதிக வசதி வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. உள்ளூர் உணவங்கள் தொடங்கி பன்னாட்டு உணவகங்களும் செயல்படுகின்றன.
எந்த ரயில் எந்த நடைமேடையில் நிறுத்தப்படும் என்பது உள்ளிட்ட அனைத்து வகையான உதவிகளுக்கும் இலவச இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |