சீனாவில் பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவிற்கு குறைவு - 3.4 மில்லியன் மக்கள் தொகை சரிவு
சீனாவில் பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவிற்கு குறைந்துள்ளது.
1949-இல் மக்கள் குடியரசு நிறுவப்பட்டதிலிருந்து மிகக் குறைந்த பிறப்பு விகிதம் 2025-இல் பதிவாகியுள்ளது.
தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்ட தரவின்படி, 2025-இல் சீனாவின் பிறப்பு விகிதம் 1,000 பேருக்கு 5.6-ஆகக் குறைந்துள்ளது.
மொத்தம் 7.92 மில்லியன் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 17 சதவீதம் குறைவு.

இதனால், சீனாவின் மொத்த மக்கள் தொகை 3.4 மில்லியன் குறைந்து 1.405 பில்லியனாக சரிந்துள்ளது. இது 1960-இல் நடந்த பெரும் பஞ்சத்திற்குப் பிறகு மிகப்பெரிய சரிவு எனக் கருதப்படுகிறது.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தலைமையிலான அரசு, பிறப்பு விகிதத்தை ஊக்குவிக்க கூடுதல் மகப்பேறு/தந்தை விடுப்பு, திருமண பதிவு எளிமைப்படுத்தல், நேரடி நிதி உதவி ஆகிய திட்டங்களை அறிமுகப்படுத்தியிருந்தாலும், பெரிய மாற்றம் ஏற்படவில்லை.
தற்போது, ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுக்கு 500 டொலர் உதவி வழங்கப்படுகிறது. மேலும், கருத்தடை மருந்துகள் மற்றும் சாதனங்களுக்கு 13 சதவீத வரி (VAT) மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சுயாதீன மக்கள் தொகை ஆய்வாளரான ஹே யாஃபூ, “அரசின் உதவித் தொகை மிகச் சிறியது. திருமண விகிதம் குறைவு, குழந்தை பெறும் வயதிலுள்ள பெண்களின் எண்ணிக்கை குறைவு ஆகியவை முக்கிய காரணங்கள்” எனக் கூறியுள்ளார்.
ஒரே குழந்தை கொள்கை (One-Child Policy) 2015-இல் நீக்கப்பட்டாலும், அதன் விளைவுகள் இன்னும் தொடர்கின்றன.
சீனாவின் மக்கள் தொகை குறைவு, வேலைவாய்ப்பு, பொருளாதார நிலைத்தன்மை மற்றும் ஓய்வூதிய அமைப்புக்கு பெரிய சவாலாக மாறியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
China birth rate, China population drop, China population decline, China fertility crisis, China demographic crisis, China shrinking population news, China birth rate fall, China fertility rate, China population crisis