புதிய ஏவுதளங்கள், பதுங்கு குழிகளை உருவாக்கிவரும் சீனா., வெளியான ஆதாரங்கள்
சீனா, புதிய அணு ஏவுதளங்கள் மற்றும் பதுங்கு குழிகளை உருவாக்கிவருகிறது என்பதை செயற்கைகோள் படங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
சீனா, தனது அணு ஏவுகணை தளங்களை பாதுகாக்கும் நோக்கில், சின்ஜியாங் பாலைவனப் பகுதியில் மிகப்பெரிய இராணுவ வளாகத்தை அமைத்து வருகிறது.

செயற்கைக்கோள் படங்களில், 80-க்கும் மேற்பட்ட ஏவுதளங்கள் (launch pads), பதுங்கு குழிகள் (bunkers) மற்றும் தொடர்பு நிலையங்கள் கட்டப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இந்த ஏவுதளங்கள், சீனாவின் mobile missile launchers மற்றும் air-defense units-க்கு பயன்படுத்தப்படலாம் என பாதுகாப்பு ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், electronic warfare, satellite communications மற்றும் command operations-க்கு தேவையான வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

சீனாவின் அணு கொள்கை “no first use” என்ற அடிப்படையில் அமைந்துள்ளது. அதாவது, சீனா முதலில் அணு தாக்குதல் நடத்தாது, ஆனால் தாக்குதலுக்குப் பிறகு பதிலடி கொடுக்கத் தயாராக இருக்கும். இந்த புதிய கட்டுமானங்கள், சீனாவின் second-strike capability-ஐ வலுப்படுத்தும் முயற்சியாகக் கருதப்படுகின்றன.
சின்ஜியாங் மற்றும் கான்சு மாகாணங்களில் உள்ள silo fields, சீனாவின் நில அடிப்படையிலான அணு ஆயுதங்களின் முக்கிய பகுதிகளாகும். அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான தைவான் பிரச்சினை காரணமாக, அணு போட்டி மேலும் தீவிரமாகிறது.
“இவ்வளவு பெரிய அளவில் கட்டுமானம் நடைபெறுவது அபூர்வம். இது சீனாவின் அணு தடுப்பு திறனை மிகுந்த அளவில் மேம்படுத்தும்” என பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |