ட்ரம்புக்கு எதிராக... ஐரோப்பாவுக்கு அழைப்பு விடுத்த சீனா
அமெரிக்காவின் முரட்டுத்தனமான வரி விதிப்புகளுக்கு எதிராக ஒருங்கிணைய வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.
பொறுப்பற்ற முறையில்
இறக்குமதி செய்யப்படும் சீனப் பொருட்களுக்கு ஜனாதிபதி ட்ரம்ப் 145 சதவீத வரி விதித்துள்ளதையும் சீனா குறிப்பிட்டுள்ளது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் மீது விதிக்கப்பட்ட 20 சதவீத வரி விதிப்பானது 90 நாட்களுக்கு இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா தொடர்ந்து பொறுப்பற்ற முறையில் செயல்பட்டால், வர்த்தகப் போரை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது. சீனாவும் இந்தியாவும் இனி ஒன்றாக செயல்பட முடிவு செய்துள்ள நிலையில், தற்போது ஐரோப்பாவுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.
ஒத்துழைக்க வேண்டும்
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் உடனான சந்திப்பின் போதே சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், ஐரோப்பாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்காவுடனான வர்த்தகப் போரைத் தவிர்க்க ஐரோப்பிய ஒன்றியமும் சீனாவும் ஒத்துழைக்க வேண்டும் என்று சீன ஜனாதிபதி ஜின்பிங் ஸ்பெயின் பிரதமரை எச்சரித்தார்.
சீனாவிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50 பில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்களை வாங்கும் ஸ்பெயின் நாட்டின் பிரதமர் தெரிவிக்கையில், வர்த்தகம் தொடர்பான பதட்டங்கள் சீனா உடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்பைத் தடுக்கக்கூடாது என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |