ஈரானை முற்றுகையிட்டது தவறு., அமெரிக்காவின் செயலுக்கு சீனா எதிர்ப்பு
ஈரான் கடற்படைக்கு எதிரான அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை சீனா கண்டித்துள்ளது.
மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்
ஹார்முஸ் ஜலசந்தியில் வணிக கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து அதற்கு பதிலடியாக அமெரிக்க படைகள் ஈரானிய இராணுவ இருப்புகளை குறிவைத்து தாக்குதலை தொடங்கியுள்ளது.
அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளை குறிவைத்து ஈரானும் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குரலை முன்னெடுத்தது.

அமெரிக்காவுக்கு சீனா எதிர்ப்பு
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜுயான் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஈரானுக்கு எதிரான அமெரிக்க படைகளின் கடற்படை முற்றுகை நடவடிக்கையை சீனா எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய லின், அமெரிக்கா - ஈரான் ஆகிய இரண்டு நாடுகள் இடையிலும் மீண்டும் ஆயுத மோதல் தொடங்கி இருப்பது கவலையையும், அக்கறையையும் ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் பேச்சுவார்த்தைகள் மற்றும் இராஜதந்திர முயற்சிகள் மூலம் இருதரப்பும் தீர்வு காண வேண்டும் என்றும் லின் வலியுறுத்தியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |