Rare Earth ஏற்றுமதி கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் சீனா
சீனா Rare Earth கனிமங்களின் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கியுள்ளது.
உலக Rare Earth கனிமங்கள் சந்தையில் முக்கியமான ஜடத்தை பிடித்துள்ளது நாடு சீனா.
இந்த அரிய பூமி கனிமங்கள், மின்னணு சாதனங்கள் முதல் போர் விமானங்கள் வரை பல தொழில்நுட்ப உற்பத்திகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
சமீபத்தில், சீனா அரசு இந்த அரிய கனிமங்கள் தொடர்பான தொழில்நுட்பங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்த புதிய விதிகளின்படி, சுரங்கம் தோண்டுதல், உருக்குதல் மற்றும் செயலாக்கம் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்ய விரும்பும் நிறுவனங்கள் அரசு உரிமம் பெற வேண்டும்.
மேலும், சீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட கனிமங்களை வெளிநாடுகளுக்கு வழங்கும் நிறுவனங்களும் உரிமம் பெற வேண்டிய கட்டாயம் உள்ளது.
இந்த நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்பை உறுதிசெய்வதற்கும், போர் மற்றும் மற்ற முக்கியமான துறைகளில் இந்த கனிமங்கள் பயன்படுத்துவதை தடுப்பதற்கும் மேற்கொள்ளப்படுவதாக சீனா வர்த்தக அமைச்சும் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு, மேம்பட்ட கணிப்பொறி மற்றும் மெமரி சிப்கள் போன்ற துறைகளில் பயன்படுத்தப்படும் கனிமங்கள் தொடர்பான உரிம கோரிக்கைகள் தனிப்பட்ட முறையில் பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் அமெரிக்காவுடன் சீனாவின் வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஏப்ரலில், சீனா ஏற்கெனெவே 7 வகையான அரிய கனிமங்களின் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இது உலகளவில் உற்பத்தி சங்கிலியை பெரிதும் பாதித்தது.
இந்த புதிய நடவடிக்கைகள், சீனாவின் பாதுகாப்பு நலன்களை முன்னிறுத்தும் முயற்சியாகவும், உலக வர்த்தகத்தில் அதன் தாக்கத்தை வலுப்படுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
China rare earth export restrictions, rare earth minerals military use, semiconductor supply chain China, China trade controls, rare earths national security, China vs US trade war