ரஷ்யாவில் புடினை சந்தித்த சீன பாதுகாப்பு அமைச்சர்: ராணுவ ஒத்துழைப்பு பற்றி பேச்சுவார்த்தை
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை, சீன பாதுகாப்பு அமைச்சர் சந்தித்து, ரஷ்ய இராணுவத்துடன் நெருங்கிய தகவல் தொடர்பு கொள்ள தயாராக இருப்பதாக கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதின் உடன் சந்திப்பு
சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் லீ ஷாங்ஃபு(Li Shangfu) கடந்த ஏப்ரல் 16ஆம் திகதி, ரஷ்யாவிற்கு பயணம் சென்று ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினை(Vladimir Putin) சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பில் ரஷ்ய ராணுவங்களுக்கும், சீனாவிற்கு இடையேயான உறவுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக, இரு நாடுகளின் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
@reuters
தங்கள் இராணுவங்களுக்கு இடையே நெருக்கமான தகவல் தொடர்புகளை பெற, ரஷ்யாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக சீன பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.
ரஷ்யாவுடன் பலதரப்பு ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை, சீனா தொடர்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்குவின்(Sergei Shoigu) உடனிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ராணுவ ஒத்துழைப்பு
"உலகம் மற்றும் பிராந்திய பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை பராமரிப்பதில் புதிய பங்களிப்புகளை செய்ய ரஷ்யாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது" என்று லீ ஷாங்ஃபு கூறியதாக ரஷ்ய அரசின் ஊடக அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
@ap
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்குவும் கலந்துகொண்ட இந்த சந்திப்பின் போது, ரஷ்யாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பை புதின் வரவேற்றதாக சீன செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
"ரஷ்யா மற்றும் சீனா, இராணுவங்களின் மூலமாகவும் தீவிரமாக பணியாற்றி வருகிறோம், பயனுள்ள தகவல்களைத் தொடர்ந்து பரிமாறி வருகிறோம், இராணுவ-தொழில்நுட்ப ஒத்துழைப்புத் துறையில் ஒத்துழைக்கிறோம், கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்கிறோம்" என்று புடின் தெரிவித்துள்ளார்.
@ap
"இது, சந்தேகத்திற்கு இடமின்றி, இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளின் பிரத்தியேக நம்பிக்கையான, ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தும் மற்றொரு முக்கியமான பகுதி" என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மேலும் கூறியுள்ளார்.