மிகப்பெரிய ஜாக்பாட்... அரிய கனிமம் ஒன்று சீனாவில் பெருமளவில் கண்டுபிடிப்பு
அணு உலைகளில் முக்கியமாகப் பயன்படுத்தப்படும் ஒரு கனிமத்தின் பெருமளவு இருப்பை சீனா கண்டுபிடித்துள்ளது.
கிட்டத்தட்ட நான்கு மடங்கு
சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் உள்ள தாரிம் படுகையின் வடக்கு விளிம்பில் இந்த கனிமத்தின் மிகப்பெரிய இருப்பைக் கண்டறிந்துள்ளது. சீனாவின் இந்தக் கண்டுபிடிப்புக்குப் பிறகு, இந்த கனிமத்தின் மிகப்பெரிய இருப்பு உலக அளவில் கனிம வளங்களின் விநியோக அமைப்பில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது.
அந்தக் கனிமத்தின் பெயர் சிர்கோனியம். மிக சமீபத்தில் பூமிக்கு ஆறாயிரம் அடி ஆழத்தில் யுரேனியம் இருப்புகளை சீனா கண்டுபிடித்தது. தற்போது குபாய் படுகையில் சிர்கோனியத்தைக் கண்டுபிடித்துள்ளது.
இங்கு 20 லட்சம் டன் சிர்கோனியம் ஆக்சைடு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது சீனாவில் தற்போதுள்ள சிர்கோனியம் இருப்புக்களை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகம்.
உண்மையில், சீனா தற்போது மொத்தம் 5 லட்சம் டன் சிர்கோனியம் இருப்பு வைத்துள்ளது. இதில், 90 சதவீதத்தை சீனா இறக்குமதி செய்திருந்தது. சிர்கோனியம் என்பது மிகவும் எதிர்ப்புத் திறன் கொண்டதாகக் கருதப்படும் ஒரு வெள்ளை நிற உலோகமாகும்.
அணு உலைகளில்
இது மிகவும் இலகுவான உலோகம், ஆனால் அதன் வலிமை ஒப்பிடமுடியாதது. வெப்பம் மற்றும் வேதியியல் செயல்முறை காரணமாக இது உடைவதில்லை. இது மிகக் குறைந்த நியூட்ரானையே உறிஞ்சுகிறது, அதனால்தான் இது அணு உலைகளில் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது.
இது அதிக வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்டது. இது அணுசக்தித் துறையில் எரிபொருள் தண்டு உறைப்பூச்சு தயாரிக்கப் பயன்படுகிறது. இது தவிர, ஏவுகணைகளில், வெப்பக் கவசங்களும் இதில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
நகைகளில் சிர்கான் ஒரு ரத்தினமாகவும் பயன்படுத்தப்படுகிறது. அவுஸ்திரேலியாவில் இருந்தே சீனா தங்களுக்கு தேவையான சிர்கோனியத்தை இறக்குமதி செய்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |