பொருளாதார நெருக்கடியில் சீனா: உலக பொருளாதாரத்தை பாதிக்குமா?
சீன பொருளாதாரம் சரிவை சந்திக்கும் போது உலக நாடுகள் சந்திக்கும் நெருக்கடிகள் என்னவாக இருக்கும் என்பதை இந்த செய்தி விளக்குகிறது.
உலகின் இரண்டாவது பொருளாதாரம்
சீனா மொத்தம் 1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையுடன் உலகின் 2வது மிகப்பெரிய பொருளாதார நாடாக உள்ளது.
ஆனால் சீனாவில் தற்போது அதிகரிக்கும் வேலையின்மை, ரியல் எஸ்டேட் துறையில் வீழ்ச்சி, மெதுவான பொருளாதார வளர்ச்சி போன்றவை நாட்டில் நெருக்கடியை உருவாக்கி வருகிறது.
Getty
இந்நிலையில் சீனா சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடிகள் குறித்து உலகின் பிற நாடுகள் கவலைப்பட வேண்டுமா என்றால், ஆய்வாளர்கள் தெரிவித்த கருத்தில் இந்த நெருக்கடி கவலைகள் மிகைப்படுத்தப்பட்டவை என்று குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும் சீனாவுடன் நேரடி தொடர்பில் இல்லாத பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் அதன் பணியாளர்கள் சீனாவின் பொருளாதார நெருக்கடியால் சில எதிர்மறை விளைவுகளை சந்திக்க நேரும் வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளனர்.
உதாரணமாக சீனாவின் உள்நாட்டு நுகர்வுகளை நம்பி இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் இதன்முலம் சிறிய பாதிப்புகளை சந்திக்கலாம்.
Getty
பொருளாதார நிபுணர்கள் சிலர், சீனா உலகப் பொரூளாதாரத்தின் முதுகெலும்பு என்பது மிகைப்படுத்தப்பட்டவை என்று கருத்து தெரிவிக்கின்றனர்.
ஆனால், இந்த நெருக்கடியில் இருந்து மீள சீனா அமெரிக்காவுடனான உறவுகளைச் சரிசெய்ய முயற்சிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் சிலர் கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |