இந்தியாவுக்கு பேராபத்து! இலங்கை தமிழர்களின் வாழ்விடமான வடக்கு மாகாணத்தையும் வளைத்து போடும் சீனா? வெளிவரும் தகவல்
இலங்கை தமிழர்களின் வாழ்விடமான வடக்கு மாகாணத்தை சீனா வளைத்து போட துவங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகையே தன்னுடைய கட்டிற்குள் கொண்டு வர துடிக்கும், சீனா அதற்கான வேலைகளை கொஞ்சம், கொஞ்சமாக செய்து வருகிறது என்றே சொல்லலாம். உயிரி ஆயுதம் என்ற கொரோனாவை சீனா தான் பரப்பியுள்ளது என்ற அமெரிக்கா போன்ற நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.
ஆனால் இதுவரை எதுவும் நிரூபிக்கப்படவில்லை. இதற்கிடையில் சீனா, இந்தியா எல்லை பிரச்சனை உள்ளது.
இதைத் தொடர்ந்து இந்தியாவின் அண்டை நாடாக இருக்கும் இலங்கையின் தென்பகுதியில் வலுவாக காலூன்றியிருக்கும், அடுத்ததாக ஈழத்தமிழர்களின் வாழ்விடமான வடக்கு மாகாணத்தையும் வளைத்து போடத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்பகுதியில் காற்றாலை, மீன் வளர்ப்பு திட்டங்களுக்காக சீனாவுக்கு இலங்கை நிலம் ஒதுக்கி தந்துள்ளதாகவும், இது தமிழக கடல் பகுதியிலிருந்து மிக மிக அருகில் சீனா நெருங்கி வருவது இந்தியாவின் பாதுகாப்புக்கும் பேராபத்தாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
அண்டை நாடுகளை ஓட விட்டு, தென் சீன கடலை மொத்தமாக ஆக்கிரமித்த சீனா, அடுத்ததாக ஆசியாவின் முடிசூடா மன்னனாக தன்னை வளப்படுத்திக் கொள்ள, இந்திய பெருங்கடலைக் குறிவைத்துள்ளதாக எச்சரிக்கப்படுகிறது.
இதற்காக இந்திய பெருங்கடலைச் சுற்றியுள்ள நாடுகள் அனைத்தையும் தனது காலடியின் கீழ் கொண்டு வரும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதாம். ஏற்கனவே பாகிஸ்தானை தன் வசம் ஆக்கிக் கொண்டா சீனா, இலங்கையையும் மெல்ல மெல்ல தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது.
ஒருகாலத்தில் இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாக இருந்த இலங்கை, கடந்த 2009-ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டுப் போருக்கு பின் மொத்தமாக மாறிவிட்டது. இப்போது சீனாவுடன், இலங்கை நெருக்கம் காட்டி வருகி்றது. கடன் கொடுத்து நாடுகளை வளைக்கும் வித்தையை இலங்கையிலும் சீனா காட்ட துவங்கியுள்ளது.
பல்வேறு வளங்கள் நிறைந்த அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுக்கு சீனா குத்தகைக்கு எடுத்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் அமைந்திருக்கும் அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் புதிய பட்டுப் பாதை திட்டத்திற்கு முக்கியத் துறைமுகமாக இருக்கும் என்பதால், இதன் மூலம் சீனாவின் ராணுவத் தளமாக இப்பகுதி மாறிவிடும் ஆபத்து உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டையை கைப்பற்றிய சீனா, இலங்கையின் தென் பகுதியில் வலுவாக காலூன்றிய நிலையில், தற்போது ஈழத்தமிழர்கள் வாழும் வடக்கு மாகாண பிராந்தியத்திலும் நுழையத் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கையின் வடக்கே மன்னார் வளைகுடா பகுதியில் பிரமாண்ட காற்றாலைகளை நிறுவி மின் உற்பத்தி செய்யும் திட்டத்தை இலங்கை முன்னெடுத்தது. இத்திட்டத்தை யாழ்ப்பாணத்தில் 3 தீவுகளில் சீன நிறுவனங்களுடன் சேர்ந்து செய்ய இலங்கை அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதற்கு ஏற்கனவே இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, வடக்கு மாகாண கடலோர கிராமங்களில் கடல் அட்டை வளர்ப்பு திட்டத்திற்காக சீனாவுக்கு இலங்கை அரசு நிலம் ஒதுக்கி தந்துள்ளது.
இதுமட்டுமின்றி வடக்கில் பல உள்கட்டமைப்பு திட்டங்களையும் செய்ய சீனா தயாராகி வருகிறது. அம்பாந்தோட்டை கன்னியாகுமரியிலிருந்து சுமார் 300 கி.மீற்றர் தொலைவில் உள்ளது. ஆனால், காற்றாலை திட்டங்களை செயல்படுத்த சீனாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் தமிழக கடல் பகுதியில் இருந்து வெறும் 50 கி.மீற்றர் மட்டுமே உள்ளன.
இந்த அளவுக்கு சீனா, இந்தியாவுக்கு மிக மிக அருகில் நெருங்கி வருவது நிச்சயம் பேராபத்தே என இந்திய கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். இதுவரை சீனா தன்னுடைய இராஜதந்திரம் இலங்கை, பாகிஸ்தானை தவிர இந்திய பெருங்கடலை ஒட்டிய சீசெல்ஸ், மொரீஷியஸ், மாலத்தீவு, வங்க தேசம், மியான்மர் மற்றும் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.
இந்திய பெருங்கடலை சீனா ஆக்கிரமிப்பதில் மிகப்பெரிய தடையாக இருப்பது இந்தியா மட்டுமே. ஏற்கனவே பொருளாதார சிக்கலில் உள்ள இலங்கை அரசு, கொரோனாவால் மேலும் தடுமாற்றத்தை கண்டது.
இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. கடும் தட்டுப்பாடு காரணமாக, சர்க்கரை ஒரு கிலோ 200 ரூபாய்க்கு மேல் உயர்ந்தது. பருப்பு 250 ரூபாய் ஆக அதிகரித்தது.
அரிசி உள்ளிட்ட அன்றாட பொருட்கள் விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பொருளாதார அவசர நிலையயை இலங்கை அரசு அமல்படுத்தியுள்ளது.
இதன்படி இனி அத்தியவாசிய பொருட்களை பதுக்குவது, அதிக விலைக்கு விற்பதற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய கடற்படை பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், சீனா தனது கொள்ளையடிக்கும் கடன் கொள்கைகளின் மூலம் ஏற்கனவே இலங்கைக்குள் ஆழமான ஊடுருவிள்ளது.
இப்போது, முடிந்தவரை இந்திய கடல் பகுதிக்கு அருகில் தனது இருப்பை நிலைநிறுத்துவதற்கு உறுதியுடன் செயல்படுகிறது.
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் சீனாவின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்கள் எதிர்காலத்தில் இந்தியாவுக்கு பிரச்னையாக அமையலாம்.
இது நிச்சயமாக கவலை அளிக்கிறது. இந்த விஷயத்தை இந்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருவதாக கூறியுள்ளார்.