வெள்ளத்தில் தப்பிய 900 பாம்புகள்: விஷ பாம்புகளால் அஞ்சி நடுங்கும் சீன கிராம மக்கள்
சீனாவில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் பண்ணையில் இருந்து நூற்றுக்கணக்கான பாம்புகள் தப்பியதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
தப்பிய ஆயிரக்கணக்கான பாம்புகள்
சீனாவின் குவாங்சி மாகாணத்தில் பெய்த பெரும் மழை காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
துரதிர்ஷ்டவசமாக இந்த வெள்ளத்தில் அப்பகுதியில் செயல்பட்டு வந்த வணிக ரீதியான பாம்பு பண்ணையும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
🇨🇳🐍 Las inundaciones desatan una nueva amenaza en China.
— Luis Gabriel Velázquez (@soyluisgabriel1) July 9, 2026
Unas 900 serpientes, incluidas cobras venenosas, escaparon de un criadero tras el paso del tifón.
⛑️ Equipos de emergencia buscan a los reptiles mientras la población permanece en alerta. Hasta el momento, una persona… pic.twitter.com/POHQrs1m8U
இதனால் பாம்பு பண்ணையில் வளர்க்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாம்புகள் வெள்ள நீரில் தப்பிச் சென்றுள்ளது அப்பகுதி மக்களை அச்சத்தில் தள்ளியுள்ளது.
தப்பிச் சென்ற பாம்புகளில் கொடிய விஷம் கொண்ட நாகப் பாம்புகளும் அடங்கும் என்பது கூடுதல் பயத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
வெளியான தகவல்களின் அடிப்படையில், குறைந்தது 900 பாம்புகள் பண்ணையில் இருந்து தப்பி வெளியேறி இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹெங்ஜோ நகரில் பெண் ஒருவர் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
வெள்ளத்தினால் சாலைகள் சேதமடைந்து இருப்பதால், பாம்பு கடியால் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனைக்கு சரியான நேரத்துக்கு கொண்டு செல்ல முடியவில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பாம்பு வளர்ப்பை நம்பி இருக்கும் வாழ்வாதாரம்
சீனாவின் மிகப்பெரிய பாம்பு வளர்ப்பு மையமாக குவாங்சி மாகாணம் திகழ்கிறது.
இங்கு பாரம்பரிய உணவுகள், தோல் பொருட்கள் மற்றும் மருத்துவ தேவைகள் என ஆண்டுக்கு கிட்டத்தட்ட 3 கோடி பாம்புகள் இங்கு வளர்க்கப்படுகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |