ஸ்பெயின் வெப்ப அலைக்கு மத்தியில் வேகமாய் பரவும் காட்டுத்தீ: இதுவரை 12 பேர் உயிரிழப்பு
ஸ்பெயினில் தீவிரமான வெப்ப அலைகளுக்கு மத்தியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 12 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
வேகமாக பரவும் காட்டுத்தீ
ஸ்பெயினின் தெற்கு பகுதியில் நிலவி வரும் வெப்ப அலைகளுக்கு மத்தியில் அல்மேரியா(Almeria) மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 12 பேர் வரை உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வியாழக்கிழமை மாலை பெடார்(Bedar) கிராமத்தில் தொடங்கிய காட்டுத்தீ சம்பவத்தில் முதலில் 6 பேர் வரை உயிரிழந்தனர்.
இவர்களில் சிலர் காட்டுத்தீயில் இருந்து தப்பிப்பதற்காக காரில் வெளியேற முயன்ற போது அதில் சிக்கி கொண்டு உயிரிழந்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை Los Gallardos பகுதியில் பரவி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த மேலும் 6 பேரின் உடலை அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர்.

மீட்பு பணிகள் தீவிரம்
தீயை கட்டுக்குள் கொண்டு வர 150 தீயணைப்பு வீரர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், நவீன தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மருத்துவ குழுக்கள் இணைந்து செயல்பட்டு வருகிறது.
மேலும் 150 ராணுவ அவசர கால படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுமக்கள் உயிர்களை பாதுகாக்கும் பொருட்டு அல்மோகாய்சர், புவென்டே டெல், அல்பாரிகொ, லாஸ் பினோஸ் மற்றும் லா செரீனா ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |