பிரித்தானியாவில் உள்ள பாலியல் குற்றவாளியை நாடு கடத்த திட்டம்: பாகிஸ்தான் முன்வைக்கும் நிபந்தனை
சிறை தண்டனை பெற்றுள்ள பாலியல் குற்றவாளியை பாகிஸ்தானுக்கு நாடு கடத்த பிரித்தானியா தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
குற்றவாளியை பாகிஸ்தானுக்கு நாடு கடத்த முயற்சி
பிரித்தானியாவில் டாடி என்று பாதிக்கப்பட்டவர்களால் அழைக்கப்படும் ஷபீர் அகமது என்ற 73 வயது நபர் கடந்த 2012ம் ஆண்டு 30 பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக 22 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்.
ரோச்டேல் சிறுமிகள் துஷ்பிரயோக வழக்கில் ஷபீர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அவரது பிரித்தானிய குடியுரிமையும் பறிக்கப்பட்டது.

ஆனால் 1971ம் ஆண்டு குடியேற்ற சட்ட விதிகள், 1973 ம் ஆண்டுக்கு முன்னதாக பிரித்தானியாவில் குடியேறிய காமன்வெல்த் நாடுகளின் குடிமக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதால் ஷபீர் அகமதுவை பாகிஸ்தானுக்கு நாடு கடத்த முடியாமல் திணறி வருகிறது.
பாகிஸ்தானின் புதிய நிபந்தனை
இந்நிலையில் பாலியல் குற்றவாளி ஷபீர் அகமதுவை பாகிஸ்தானுக்கு நாடு கடத்துவதை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாகவும், ஆனால் அதற்கு மாறாக பிரித்தானியாவில் பாதுகாப்பாக இருந்து கொண்டு பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அரசியல் தலைமை குறித்து விமர்சிக்கும் நபர்களை பாகிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.
பாகிஸ்தானின் கோரிக்கை படி, ஷஹ்சாத் அக்பர், ஆதில் ராஜா அல்டாஃப் ஹூசைன் ஆகியோரை பிரித்தானியா பாகிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்துள்ளது.

பிரித்தானியாவின் மாற்று நடவடிக்கை
பாகிஸ்தானின் இந்த நிபந்தனையை தொடர்ந்து, 1971ம் ஆண்டு குடியேற்ற சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வந்து, ஷபீர் அகமது போன்றவர்களை நாடு கடத்தலாமா என்று பிரித்தானிய உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் பரிசீலித்து வருகிறார்.
மேலும் பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் அந்நாட்டின் மீது விசா கட்டுப்பாடுகள் விதிப்பது மற்றும் உதவிகளை குறைப்பது போன்ற நடவடிக்கைகளை எடுப்பது ஆகியவற்றுக்கும் பிரித்தானியா தயாராகி வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |