காதலனை பழி வாங்குவதற்காக ஆன்லைனில் ஆர்டர் செய்து பழி வாங்கிய காதலி! கமெராவில் சிக்கிய காட்சி
சீனாவில் காதலனை பழி வாங்க காதலி டெலிவரி கொடுக்கும் நபரை வைத்து செய்த செயல் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
சீனாவின் ShangDong நகரத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தன்னை ஏமாற்றிய முன்னாள் காதலனை பழி வாங்க நினைத்துள்ளார்.
இதன் காரணமாக டீயை ஆன்லைனில் புக் செய்த அவர், அதை தன்னுடைய முன்னாள் காதலன் முகத்தில் ஊற்ற வேண்டும் என்று ஆர்டரில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த பெண் குறிப்பிட்டிருந்தது போலவே, டெலிவரி கொடுக்க சென்ற நபர், டீயை காதலன் முகத்தில் ஊற்றியுள்ளார்.
இதனால் காதலன் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் முழித்துள்ளார். அதன் பின் அவரிடம் டெலிவரி சீட் ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில், தங்களது முன்னாள் காதலி இதை செய்ய சொல்லி குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து தான் செய்த செயல் தவறு என்பதை உணர்ந்த டெலிவரி மேன், அந்த இளைஞரிடம் மன்னிப்பு கேட்டு, முகத்தில் கொட்டிய டீ-யை துடைப்பதற்கு துணி கொடுத்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.