சீனாவின் Visa-Free Entry பட்டியலில் 2 ஆசிய நாடுகள் சேர்ப்பு
Two asian countries join China's visa-free entry list: சீனாவின் Visa-Free Entry பட்டியலில் 2 ஆசிய நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளது.
சீனாவின் தேசிய குடியேற்ற நிர்வாகம் (NIA) அறிவித்துள்ள புதிய கொள்கையின் படி, கிற்கிஸ்தான் மற்றும் வியட்நாம் குடிமக்கள் இனி சீனாவிற்கு விசா இல்லாமல் நுழையலாம்.
இந்த விதிமுறை இன்று முதல் (ஆகஸ்ட் 20, 2026) அமுலுக்கு வருகிறது.

10 நாட்கள் வரை தங்கலாம்
புதிய கொள்கையின் படி, இந்த இரண்டு நாடுகளின் குடிமக்கள் 240 மணி நேர visa-free transit அனுமதி பெறுவர்.
அவர்கள் பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட 65 திறந்த துறைமுகங்கள் வழியாக சீனாவிற்குள் நுழைந்து, குறிப்பிட்ட பகுதிகளில் 10 நாட்கள் (240 மணி நேரம்) வரை தங்கலாம். மேலும், ஹைனான் மாகாணத்தில் 30 நாட்கள் வரை விசா இல்லாமல் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த காலத்தில் அவர்கள் சுற்றுலா, வணிகம், குடும்ப சந்திப்பு போன்ற குறுகிய கால நடவடிக்கைகளில் ஈடுபடலாம். ஆனால் வேலை, படிப்பு, செய்தி சேகரிப்பு போன்ற செயல்களுக்கு முன்கூட்டியே விசா பெற வேண்டும்.
57 நாடுகளுக்கு விரிவு
சீனாவின் விசா கொள்கையை விரிவுபடுத்தும் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அண்டை நாடுகளுடன் நம்பிக்கை, ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சீனாவின் 240-hour visa-free transit policy தற்போது 57 நாடுகளுக்கு விரிவடைந்துள்ளது.
இந்த புதிய விதிமுறைகள், சீனாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |