உக்ரைன் போரில் அம்பலமான சீனாவின் ரகசிய பங்கு... அதிகரிக்கும் நெருக்கடி
ரஷ்யாவுடன் இணைந்து சீன நடவடிக்கைகள் செயல்படுவதை உறுதிப்படுத்தும் தரவுகளை உக்ரைன் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து, மூன்றாம் உலகப் போர் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது.
உக்ரைன் போரில் புதிய ஒரு சக்தி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான சந்திப்பிற்குப் பிறகு, விளாடிமிர் புடின் அமைதி ஒப்பந்தம் குறித்த எந்தவொரு பேச்சையும் முன்னெடுக்க மறுத்து வருகிறார்.
ஆனால், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை மாஸ்கோவிற்கு அழைப்பதுடன், பேச்சுவார்த்தையை ரஷ்யாவில் தொடர வலியுறுத்தி வருகிறார். மட்டுமின்றி, உக்ரைனில் மேற்கத்திய இராணுவம் பாதுகாப்பு உத்தரவாதத்திற்காக களமிறங்குவதையும் புடின் கடுமையாக எதிர்த்துள்ளார்.
ஆனால் தற்போது உக்ரைன் போரில் புதிய ஒரு சக்தி நுழைந்துள்ளதும், நான்காவது ஆண்டை நோக்கி போர் நீடிக்க இருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது சீன துருப்புக்கள் ரஷ்ய படைகளுடன் இணைந்து செயல்படுவதை உறுதிப்படுத்தும் காட்சிகளை உக்ரைன் இராணுவம் கைப்பற்றியுள்ளது.
இது உண்மை என உறுதி செய்யப்பட்டால், ரஷ்ய - உக்ரைன் போர் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிடும். உக்ரைனுக்கு விசுவாசமான படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன் மூலம் பதிவான சிசிடிவி காட்சிகளில், சீன பொறியாளர்கள் கமெராவை சோதிப்பது தெரியவந்தது.
சீனாவும் வட கொரியாவும்
சீனாவின் பங்கு நிரூபிக்கப்பட்டால், இது உண்மையில் சீனாவும் வட கொரியாவும் உக்ரைன் போரில் களமிறங்கியுள்ளதை உறுதி செய்யும். உக்ரைனை நாளுக்கு நாள் தாக்கப் பயன்படுத்தப்படும் ரஷ்ய ட்ரோன் படைகளை உருவாக்க சீனா ரகசியமாக செயல்பட்டு வருவது அம்பலமாகியுள்ளது.
இருப்பினும், ரஷ்யாவுக்கு உதவுவதாக சந்தேகிக்கப்படும் போதிலும், ரஷ்ய-உக்ரைன் போரின் போது இரகசியமாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் அனைத்து கூற்றுகளையும் சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |