ஐரோப்பிய நாடுகளுக்கு திடீர் தடை விதித்த சீனா! எதற்காக?
ஐரோப்பிய நாடுகளான பின்லாந்து மற்றும் எஸ்டோனியா ஆகிய நாடுகளுக்கு சீனா தடை விதித்துள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவத்தற்கு மத்தியில் சில நாடுகளில் பறவை காய்ச்சல் பரவி அரசாங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.
பறவை காய்ச்சல் பரவி பகுதிகளில் உள்ள பண்ணையில் இருக்கும் அனைத்து கோழிகளையும் கொல்ல அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில், பின்லாந்து மற்றும் எஸ்டோனியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கோழி மற்றும் தொடர்புடைய பொருட்களை சீனா தடைசெய்துள்ளது.
சீனாவின் சுங்க பொது நிர்வாகம், வேளாண்மை மற்றும் ஊரகத்துறை அமைச்சகம் இந்த தடையை விதித்துள்ளது.
இந்த இரண்டு நாடுகளிலும் H5N8 ஆல் ஏற்படும் பறவை காய்ச்சல் தொற்றுநோய் பரவியுள்ளதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.