மக்கள் தொகையை அதிகரிக்க கருத்தடை சாதனங்களுக்கு வரி விதித்துள்ள நாடு
குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் முயற்சியாக சீனாவில் கருத்தடை சாதனங்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஒரு குழந்தை முறை
ஒரு காலத்தில் மக்கள் தொகையில் முதலிடம் இருந்த சீனா தற்போது உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறியுள்ளது.
புள்ளிவிவரங்களின் படி சீனாவில் கிட்டத்தட்ட 140 கோடி மக்கள் வசிக்கின்றனர்.

சீனாவில் ஏற்பட்ட மிகப்பெரிய மக்கள் தொகை வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் அந்நாட்டில் 1994ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட குழந்தை பிறப்பு கொள்கை தான்.
சீனாவில் கடைபிடிக்கப்பட்டு வந்த தம்பதிக்கு ஒரு குழந்தை என்ற திட்டத்தின் காரணமாக நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து முதியோர் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதனால் நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் சீனாவில் வெறும் 10 கோடிக்கும் குறைவான குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளது.
கருத்தடை சாதனங்களுக்கு வரி விதிப்பு

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களை தொடர்ந்து குழந்தை பிறப்பு கொள்கை நீக்கப்பட்டது.
இருப்பினும் அங்குள்ள குடும்பங்கள் ஒரு குழந்தை முறைக்கு பழகி விட்டதால், மீண்டும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா சிரமப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் சீனா கருத்தடை சாதனங்கள் மற்றும் மாத்திரைகள் ஆகியவற்றுக்கு 13 சதவீதம் வரி விதித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |