பல மாதங்களாக சீன-இந்திய எல்லையில் நிலவி வந்த பதற்றம் முடிவுக்கு வந்தது! வெளியான முக்கிய அறிவிப்பு
சீன மற்றும் இந்திய எல்லையில் உள்ள இரு நாட்டு படைகள் அங்கிருந்து வெளியேற தொடங்கியுள்ளதாக சீன பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.
கிழக்கு லடாக்கிலுள்ள Pangong ஏரியின் தெற்கு மற்றும் வடக்கு கரையில் உள்ள சீன மற்றும் இந்திய படைகள் புதன்கிழமை முதல் ஒருங்கிணைந்து வெளியேற தொடங்கியுள்ளன என்று சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கர்னல் Wu Qian அறிவித்துள்ளார்.
சீன பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கர்னல் Wu Qian அளித்த அறிக்கை மற்றும் சீனாவின் உத்தியோகபூர்வ ஊடகங்கள் வெளியிட்ட அறிக்கை குறித்து இந்திய தரப்பிலிருந்து தற்போது வரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான தளபதி மட்ட பேச்சுவார்த்தையின் ஒன்பதாவது சுற்றில் எட்டிய ஒருமித்த கருத்துப்படி, பிப்ரவரி 10 முதல் Pangong ஏரியின் வடக்கு மற்றும் தென் கரையில் இருந்து இரு நாட்டு படைகள் வெளியேற தொடங்கின என்று Wu Qian தெரிவித்தார்.
கடந்த ஆண்டு மே மாத தொடக்கத்தில் இருந்து கிழக்கு லடாக்கில் சீனா மற்றும் இந்தியாவின் படைகள் பதட்டமான மோதலில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.