இந்திய போர் விமானங்களை வீழ்த்த பாகிஸ்தான் பயன்படுத்திய J-10C., சீனா வெளியிட்ட ஆவணப்படம்
சீன விமானங்களைக் கொண்டு இந்திய போர் விமானங்களை வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியதை தொடர்ந்து, சீனா ஆவணப்படங்களை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான், சீனாவில் தயாரிக்கப்பட்ட J-10C போர்விமானத்தை இந்திய விமானங்களை வீழ்த்த பயன்படுத்தியதாக கூறிய சில நாட்களுக்கு பின்னர், சீனாவின் அரசுத் தொலைக்காட்சி CCTV, J-10C விமானத்தின் வளர்ச்சி பற்றி இரண்டு பாகங்களைக் கொண்ட ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது.
"The Legend of the J-10" என்ற இந்த ஆவணப்படம், "Communist Party"-யின் வரலாற்றைச் சொல்கின்ற National Memory நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
சீன இளைஞர்களுக்கு நாட்டுப்பற்றை உருவாக்கும் நோக்கமாக வெளியிடப்பட்டுள்ளதாக South China Morning Post தெரிவித்துள்ளது.
மே 8-ஆம் திகதி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப், “நாம் இந்திய விமானங்களை வீழ்த்தியதில் J-10C பயன்படுத்தப்பட்டது” எனவும், இந்த ஜெட் விமானங்கள் சீனாவின் ஒத்துழைப்பில் வந்தவை எனவும் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். எனினும் பாகிஸ்தான் இதற்கு ஆதாரமாக எந்த தகவலையும் வழங்கவில்லை.
மே 17-ஆம் திகதி, சீனாவின் தேசிய ஊடகம், J-10CE (ஏற்றுமதி மொடல்) ஒரு “நிஜ போர் சூழலில் வெற்றி பெற்றது” எனவும், “பல வெளிநாட்டு விமானங்களை வீழ்த்தியுள்ளது” எனவும் கூறியது.
J-10C விமானத்தில் AESA ரடார், மேம்பட்ட என்ஜின்கள் மற்றும் PL-15 நீண்ட தூரம் செல்லக்கூடிய ஏவுகணைகள் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்கள் உள்ளன. இது 4.5 தலைமுறை போர் விமானமாக வகைப்படுத்தப்படுகிறது.
2020 முதல் 2024 வரை, பாகிஸ்தானின் ஆயுத இறக்குமதியின் 81 சதவீதம் சீனாவிலிருந்தே வந்துள்ளதென ஸ்டாக்ஹோம் சர்வதேச ஆயுத ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
China J-10C fighter jet, Pakistan India jet claim, Operation Sindoor J-10C, Chinese military documentary, J-10C vs Indian Air Force, J-10CE real battle victory, PL-15 missile China Pakistan, Chinese arms to Pakistan, Pakistan China defense ties, China airs J-10C documentary