முப்படைகளுடன் தைவானை நெருக்கும் சீனா... படைகளைத் திரட்டும் தீவு நாடு
சீன ராணுவம் தைவானைச் சுற்றி தரைப்படை, கடற்படை, விமானப்படை மற்றும் பீரங்கிப் படைப் பிரிவுகளை நகர்த்தியதுடன், போர் பயிற்சிகளுக்கும் தயாராகி வருகிறது.
ஒத்திகையில் ஈடுபட
தைவான் தீவு ஜனநாயகத்தைப் பாதுகாக்க உறுதிபூண்டதுடன், சாத்தியமான ஒரு சீனத் தாக்குதலை முறியடிப்பதற்கான ஒத்திகையில் ஈடுபட படைகளையும் திரட்டியுள்ளது.

சீனா தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், செவ்வாய்க்கிழமை பயிற்சிகள் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், உள்ளூர் நேரப்படி பகல் 8 மணி முதல் 10 மணி நேரம் தீவைச் சுற்றியுள்ள ஐந்து மண்டலங்கள் கடல் மற்றும் வான்வெளி கட்டுப்பாடுகளின் கீழ் இருக்கும் என்றும் சீனா அறிவித்துள்ளது.
அப்போதைய அமெரிக்கப் பிரதிநிதிகள் சபைத் தலைவர் நான்சி பெலோசி தைவானுக்கு வருகை தந்ததிலிருந்து, 2022-ஆம் ஆண்டுக்குப் பிறகு சீனா நடத்தும் ஆறாவது பெரிய அளவிலான போர்ப் பயிற்சி இதுவாகும்.
மட்டுமின்றி, தைவான் மீதான ஒரு தாக்குதல் ஜப்பானிலிருந்து இராணுவ பதிலடியைத் தூண்டக்கூடும் என்று ஜப்பானியப் பிரதமர் சானே தகைச்சி கூறியதைத் தொடர்ந்து இந்த ஒத்திகை முன்னெடுக்கப்படுகிறது.
தவறாக மதிப்பிட வேண்டாம்
மேலும், அமெரிக்கா தைவானுக்கு 11.1 பில்லியன் டொலர் மதிப்புள்ள ஆயுத விற்பனையை அறிவித்த 11 நாட்களுக்குப் பிறகு இந்த பயிற்சி தொடங்குகிறது.
சீனாவின் இந்த ஒத்திகையானது சாத்தியமானத் தாக்குதலுக்கு முன்னோடியாக இருக்கலாம் என்றே ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் ஒரு தாக்குதல் குறித்து மிகக் குறைந்த அளவுக்கே எச்சரிக்கை அளிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு உத்தி என்றும் கூறுகின்றனர்.

இந்த நிலையில், தைவான் அரசாங்கம் சீனாவின் இந்த ராணுவப் பயிற்சிகளைக் கண்டித்துள்ளது. மட்டுமின்றி, நிலைமையை தவறாக மதிப்பிட வேண்டாம் என்றும், பிராந்திய அமைதிக்கு குந்தகம் விளைவிக்க வேண்டாம் என்றும் ஜனாதிபதி அலுவலக செய்தித் தொடர்பாளர் சீனாவிடம் வலியுறுத்தினார்.
இதனிடையே, கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு சீன இராணுவ விமானங்களும் 11 கப்பல்களும் தீவைச் சுற்றி இயங்கி வருவதாக தீவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், தைவானின் இராணுவம் உயர் எச்சரிக்கை நிலையில் இருப்பதாகவும், விரைவான பதில் நடவடிக்கைப் பயிற்சிகளை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சீனா தைவானைச் சுற்றித் தனது வழக்கமான பயிற்சிகளில் ஒன்றை திடீரெனத் தாக்குதலாக மாற்றினால், படைகளை விரைவாக நகர்த்துவதற்காகவே அந்த குறிப்பிட்ட பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |