சீனாவில் சிறுவர்களுக்கு விதிக்கப்பட்ட அதிரடி கட்டுப்பாடு!
சீனாவில் ஓன்லைன் விளையாட்டுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி 18 வயதுக்குட்பட்டவர்கள் வாரத்திற்கு 3 மணி நேரம் மட்டுமே ஓன்லைன் விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சீனாவில் 18 வயதுக்கு கீழான மாணவர்கள் ஓன்லைன் விளையாட்டுகளில் அதிக நேரங்களை செலவிடுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக வார இறுத் நாள்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஏராளமானோர் ஆன்லைன் விளையாட்டுகளில் மட்டுமே நேரத்தை செலவிடுவதாக அந்நாட்டு அரசு கவலை அடைந்தது.
இதனை அடுத்து 18 வயதுக்குட்பட்டவர்கள் வாரத்தில் 3 மணி நேரத்திற்கு மட்டுமே ஓன்லைன் விளையாட்டுகளை விளையாட வேண்டும் என கட்டுப்பாடு விதித்து அந்நாட்டு அரசு உ
த்தரவிட்டுள்ளது.
குழந்தைகள் ஓன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாவதைத் தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.