உலகளாவிய சவால்களை ஒன்றாக எதிர்கொள்வோம்... சீனாவும் நெதர்லாந்தும் உறுதி
உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் ஒத்துழைப்பையும் தகவல்தொடர்பையும் ஆழப்படுத்த சீனாவும் நெதர்லாந்தும் உறுதிகொண்டுள்ளது.
சீனா தயாராக
காலநிலை மாற்றம் மற்றும் பசுமை மாற்றம் போன்ற சவால்களைச் சமாளிக்க பரந்த சீன-ஐரோப்பிய ஒன்றிய உறவுகளை வலுப்படுத்துவதன் முதற்கட்டம் இதுவென்றும் கூறப்படுகிறது.
சீனாவிற்கான ஏற்றுமதிகளைக் கட்டுப்படுத்த அமெரிக்கா அழுத்தம் கொடுத்ததைத் தொடர்ந்து, ஏப்ரல் 1 முதல் semiconductors மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விரிவுபடுத்துவதாக ஜனவரி மாதம் நெதர்லாந்து கூறியதை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் சமீபத்திய மாதங்களில் தணிந்துள்ளது.
சீனாவில் நடந்த சந்திப்பின் போது, வெளிவிவகார அமைச்சர் வாங் யி, நெதர்லாந்து வெளிவிவகார அமைச்சர் காஸ்பர் வெல்ட்காம்பிடம், சீனா-ஐரோப்பிய ஒன்றிய உறவுகளுக்கும் உலகப் பொருளாதாரத்தின் மீட்சிக்கும் பங்களிக்க சீனா தயாராக இருப்பதாகக் கூறினார்.
வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் நெதர்லாந்துடனான தொடர்பு மற்றும் உரையாடலை மேம்படுத்தவும், நடைமுறை ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும் சீனா தயாராக உள்ளது என்று வாங் வெல்ட்காம்பிடம் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் உத்தி
நாம் ஒன்றாக எதிர்கொள்ளும் உலகளாவிய சவால்களில் சீனாவுடன் இணைந்து பணியாற்ற ஐரோப்பிய ஒன்றியமும் நெதர்லாந்தும் விரும்புவதாக வெல்ட்காம்ப் பதிலளித்துள்ளார்.
மேலும், நெதர்லாந்து பிரதமர் டிக் ஸ்கூஃப் இந்த ஆண்டின் பிற்பகுதியில் சீனாவிற்கு பயணப்பட வாய்ப்பிருப்பதாக வெல்ட்காம்ப் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் அதிநவீன சிப் மற்றும் சிப் தயாரிப்பு உபகரணங்களை அணுகுவதை இலக்காகக் கொண்டு, ஏற்றுமதி கட்டுப்பாடுகளில் சேர நெதர்லாந்து மற்றும் ஜப்பான் போன்ற நட்பு நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் அமெரிக்காவின் உத்தியை சீனா பலமுறை விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |