சீனா, ரஷ்யாவுடன் வட கொரியாவின் உறவு- அமெரிக்காவிற்கு அணுசக்தி அச்சுறுத்தல்
அமெரிக்காவை தாக்கக்கூடிய அளவிலான சக்திவாய்ந்த அணு ஆயுதங்களை பல நாடுகள் உருவாக்கி வருகின்றன.
அமெரிக்க உளவுத்துறை தலைவர் துளசி கப்பார்டு, 2026-ஆம் ஆண்டுக்கான வருடாந்திர அபாய மதிப்பீட்டு அறிக்கையை சென்ட் உளவுத்துறை குழுவில் சமர்ப்பித்துள்ளார்.
அதில், சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, வாடா கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் அமெரிக்காவிற்கு மிகப்பெரிய அணு அபாயங்களை ஏற்படுத்தும் நாடுகளாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாடுகள் அணு மற்றும் பாரம்பரிய ஆயுதங்களை ஏவுவதற்கான புதிய, மேம்பட்ட ஏவுகணை தொழில்நுட்பங்களை உருவாக்கி வருவதாக துளசி கப்பார்டு தெரிவித்துள்ளார்.

இவை அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்புகளை தாண்டி தாக்கும் திறன் கொண்டவை.
குறிப்பாக, வட கொரியாவின் ICBM ஏவுகணைகள் ஏற்கெனெவே அமெரிக்க நிலப்பரப்பை அடையக்கூடியவை என்றும், அந்த நாடு தனது அணு ஆயுத களஞ்சியத்தை விரிவுபடுத்த உறுதியாக செயல்பட்டு வருவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
அதேபோல், பாகிஸ்தானின் நீண்டதூர ஏவுகணை திட்டங்கள், எதிர்காலத்தில் அமெரிக்காவை அடையக்கூடிய ICBM ஏவுகணைகளை உருவாக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் துளசி கப்பார்டு எச்சரித்துள்ளார்.
இதனால் அமெரிக்காவிற்கு நேரடி அபாயம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
மேலும், சீனா மற்றும் ரஷ்யா இணைந்து மேம்பட்ட ஏவுகணை அமைப்புகளை உருவாக்கி வருவதால் உலகளாவிய பாதுகாப்பு நிலைமை சீர்குலையக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.
சீனா மற்றும் ரஷ்யாவுடன், வட கொரியா நெருங்கிய உறவை வளர்த்துக்கொண்டு இருப்பது உலக அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.
அதேவேளை, அல்கய்தா மற்றும் ISIS போன்ற பயங்கரவாத மைப்புகள் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தெற்கு ஆசியாவில் இன்னும் வலுவாக செயல்பட்டு வருவதாகவும், அவை அமெரிக்காவின் வெளிநாட்டு நலன்களுக்கு நீடித்த அபாயமாக உள்ளன என்றும் துளசி கப்பார்டு குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிக்கை, அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் உலக அமைதி குறித்து புதிய களவாளிகளை எழுப்பியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |