அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை
அடுத்த சில வாரங்களுக்குள் ஈரானுக்கு புதிய வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்க சீனா தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.
சீனா நடவடிக்கை
சீனாவின் சமீபத்திய நகர்வுகள் தொடர்பில் அறிந்த மூன்று நபர்கள் இந்த விவகாரத்தில் உறுதி செய்துள்ளதாகவும் CNN செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

மட்டுமின்றி, சரக்குகளின் மூலத்தை மறைக்கும் நோக்கில், அவற்றை மூன்றாம் நாடுகள் வழியாகத் திசைதிருப்பி அனுப்பவும் சீனா நடவடிக்கை எடுத்து வருவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் அந்த மூவர் குறிப்பிட்டுள்ளனர்.
மேன்பேட்ஸ் (MANPADs) என அழைக்கப்படும், தோளில் வைத்துச் சுடும் வான் எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகளைப் பரிமாற்றம் செய்ய சீனா தயாராகி வருகிறது என்றே CNN செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
போர் நிறுத்தம் அமுலில் இருந்தாலும், ஈரான் மீது ட்ரம்ப் நிர்வாகம் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதுடன், போருக்கு ஆயத்தமாக இருப்பதாகவே தெரிவித்துள்ளது.
முடிவுக்குக் கொண்டுவர
மேலும், ஈரான் அருகே குவிக்கப்பட்டுள்ள போர் கப்பல்கள் மற்றும் இராணுவத்தினர் எந்த நேரத்திலும் தயாராக இருப்பதாகவே ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவும் ஈரானும், தங்களது ஆறு வார காலப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழிகளைத் தேடும் வகையில், பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் சனிக்கிழமையன்று உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளன.
இதில், லெபனான் போர் நிறுத்தம் உட்பட முதன்மையான நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ளது. இருப்பினும், சனிக்கிழமை நடக்கும் பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவெடுக்கப்படலாம் என்றே பல நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |