ஈரான் போரை கணித்த சீனப்பேராசிரியரின் சில்லிட வைக்கும் புதிய கணிப்பு... சின்னாபின்னமாவார்கள்

Donald Trump China Israel-Iran conflict
By Arbin Mar 08, 2026 11:08 PM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் வெற்றி, ஈரான் மீதான அவரின் போர் உள்ளிட்டவையை முன்பே கணித்துள்ள சீனப்பேராசிரியர், அடுத்து என்ன நடக்கவிருக்கிறது என்பதை குறிப்பிட்டு வெளியிட்டுள்ள கணிப்பு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று காரணிகள்

சீனப்பேராசிரியரான Xueqin Jiang பல்வேறு அரசியல் சார்ந்த கணிப்புகளை வெளியிட்டு, அவை அப்படியே நிறைவேறியுள்ளது. 2024ல் அவர் வெளியிட்டிருந்த ஈரான் பொறி என்ற விரிவுரை காணொளி மில்லியன் கணக்கானோர் இதுவரை பார்வையிட்டுள்ளனர்.

ஈரான் போரை கணித்த சீனப்பேராசிரியரின் சில்லிட வைக்கும் புதிய கணிப்பு... சின்னாபின்னமாவார்கள் | China Professor Iran War New Prediction

அதில் அவர், அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் வெல்வார் என்றால், ஈரான் மீது போர் தொடுப்பார் என குறிப்பிட்டிருந்தார். மேலும், அமெரிக்காவின் முதற்கட்ட படையெடுப்பு வெற்றிகரமாக முடிந்து, அமெரிக்கப் படைகள் ஈரானுக்குள் முன்னேற முடிவு செய்தால், ஈரானின் மலைப்பாங்கான நிலப்பரப்பில் விரைவில் சிக்கிக் கொண்டு சின்னாபின்னமாவார்கள் என்றே பேராசிரியர் Xueqin Jiang கணித்துள்ளார்.

பிப்ரவரி 28 ஆம் திகதி இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது தாக்குதலை முன்னெடுத்த ட்ரம்ப், வெளியிட்ட காணொளி ஒன்றில், தாக்குதலை நியாயப்படுத்தி இருந்தார். இதையே Xueqin Jiang முன்பே கணித்திருந்தார்.

மிக மோசமானதை எதிர்பாருங்கள்... கடும் விரக்தியில் மீண்டும் ஈரானை மிரட்டும் ட்ரம்ப்

மிக மோசமானதை எதிர்பாருங்கள்... கடும் விரக்தியில் மீண்டும் ஈரானை மிரட்டும் ட்ரம்ப்

ஈரானிய ஆட்சியையும் கண்டித்திருந்த ட்ரம்ப், இராணுவ பலம் அமெரிக்காவின் நலனுக்காகவே என்றும் வாதிட்டார். இந்த நிலையில், ஈரான் மீதான இஸ்ரேல் - அமெரிக்க கூட்டு நடவடிக்கையை கிமு 415 இல் ஏதென்ஸின் சிசிலி படையெடுப்பை ஒத்திருப்பதாக பேராசிரியர் Xueqin Jiang கணித்துள்ளார்.

இந்தப் படையெடுப்பானது பெலோபொன்னேசியப் போரின் போது நிகழ்ந்தது. தளபதிகளான அல்சிபியாட்ஸ் மற்றும் நிசியாஸ் இணைந்து ஒரு லட்சிய முயற்சியைத் தொடங்கினர், ஆனால் அவர்களின் எதிரிகளின் சக்தியைக் குறைத்து மதிப்பிட்டனர், இது இறுதியில் ஏதெனியன் பேரரசை பலவீனப்படுத்தியது.

தற்போது ஈரான் மீதான அமெரிக்காவின் படையெடுப்புக்கு மூன்று காரணிகளை Xueqin Jiang பட்டியலிட்டுள்ளார். இஸ்ரேலின் தொடர்ச்சியான அழுத்தம் காரணமாக ட்ரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளார் என்றும்,

மத்திய கிழக்கில் மொத்தமாக ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இஸ்ரேல் இந்த போருக்கு தூண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் போரை கணித்த சீனப்பேராசிரியரின் சில்லிட வைக்கும் புதிய கணிப்பு... சின்னாபின்னமாவார்கள் | China Professor Iran War New Prediction

அடுத்த இரண்டு காரணிகளில் ஒன்று அமெரிக்காவை உலகளாவிய பேரரசாக மாறற வேண்டும் என்ற ட்ரம்பின் ஆசை, இன்னொன்று சவுதி அரேபியாவுடனான ஈரானின் மோதல் போக்கு.

ஈரானின் இருப்பை சவுதி அரேபியா அச்சுறுத்தி வருகிறது. இரு நாடுகளும் நீண்ட காலமாக ஒரு மறைமுகப் போரில் ஈடுபட்டு வருகின்றன. இந்த மூன்று காரணிகளிலும் ட்ரம்ப் மையமாக இருப்பதால், ட்ரம்ப் வழியாகவே இந்த மூன்று காரணிகளும் நிறைவேறும்.

மூன்றாவது முறையாக ஜனாதிபதி

ஈரான் மீது 2027 மார்ச் மாதம் ட்ரம்ப் முழு அளவிலான படையெடுப்பை முன்னெடுப்பார் என்றே Xueqin Jiang கணித்துள்ளார். ட்ரம்புடன் இஸ்ரேலும் சவுதி அரேபியாவும் களமிறங்கும்.

ஈரான் போரை கணித்த சீனப்பேராசிரியரின் சில்லிட வைக்கும் புதிய கணிப்பு... சின்னாபின்னமாவார்கள் | China Professor Iran War New Prediction

இவர்களுக்கு ஆதரவாக பிரித்தானியா, அவுஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் போலந்து நாடுகள் நிலைக்கொள்ளும். முழு அளவிலான போருக்கு முன்னர் ட்ரம்ப் தொலைக்காட்சியில் இதை அறிவிப்பார்.

ஈரானிய மக்கள் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் விரும்புகிறார்கள் என்று கூறி ட்ரம்ப் படையெடுப்பை நியாயப்படுத்துவார். ஆனால், ஈரான் மீது ட்ரம்ப் முன்னெடுக்கும் இந்த படையெடுப்பு தோல்வியில் முடியும் என்றே Xueqin Jiang கணித்துள்ளார்.

ஈரான் போரை கணித்த சீனப்பேராசிரியரின் சில்லிட வைக்கும் புதிய கணிப்பு... சின்னாபின்னமாவார்கள் | China Professor Iran War New Prediction

ஈரான் அமெரிக்காவுடன் இப்படியான ஒரு மோதலுக்குத் தயாராகவே உள்ளது, மேலும் ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் போன்ற குழுக்கள் உட்பட அதன் பலம் இந்தப் போரில் முழுமையாக வெளிபப்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் அமெரிக்க இராணுவம் 21 ஆம் நூற்றாண்டின் போரை எதிர்த்துப் போராடுவதற்காக வடிவமைக்கப்படவில்லை, இதனால் அமெரிக்காவிற்கு மிக மோசமான பேரழிவு என்பது ஈரானுக்கு தரைப்படைகளை அனுப்புவதாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

ஈரான் போரை கணித்த சீனப்பேராசிரியரின் சில்லிட வைக்கும் புதிய கணிப்பு... சின்னாபின்னமாவார்கள் | China Professor Iran War New Prediction

இதில் மிக முக்கிய திருப்பமாக, தரைப்படைகள் ஈரானுக்கு அனுப்பப்பட்டால், ட்ரம்ப் அவசரகால போர் அதிகாரங்களுக்கு நாடாளுமன்றத்திடம் ஒப்புதல் கோரலாம், இது அவருக்கு மூன்றாவது முறையாக ஜனாதிபதி பதவியை வழங்கக்கூடும் என்றும் பேராசிரியர் Xueqin Jiang கணித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US