மிக மோசமானதை எதிர்பாருங்கள்... கடும் விரக்தியில் மீண்டும் ஈரானை மிரட்டும் ட்ரம்ப்
ஈரான் மீதான தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் கடும் பின்னடைவை எதிர்கொண்டுள்ள ட்ரம்ப், தற்போது ஈரான் மீது மிக் மோசமானத் தாக்குதலை முன்னெடுக்க இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒரு அச்சுறுத்தல்
இதுவரை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அமெரிக்கா பாதுகாப்பு வழங்கி வருவதாகவே அங்குள்ள மக்கள் நம்பியிருந்தனர். மட்டுமின்றி, பல மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா தங்களுக்கான பிரத்யேக தளங்களையும் உருவாக்கி, அதற்கான கட்டணங்களையும் அந்தந்த நாடுகளில் இருந்து வசூலித்து வந்துள்ளது.

ஆனால் தற்போது மொத்தமும் தலைகீழாக மாறியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்ட நிலையில், அமெரிக்காவால் அவர்களைப் பாதுகாக்க முடியாமல் போனது.
இது பல மத்திய கிழக்கு நாடுகளின் மக்கள் மற்றும் தலைவர்களால் வெளிப்படையாக பதிவு செய்யப்பட்டதுடன், ஈரான் மீதான ட்ரம்பின் போர் தேவையற்ற நடவடிக்கை என்றும் பல தலைவர்கள் குறிப்பிடத் தொடங்கினர்.
இப்படியான நிலைப்பாடு என்பது ஈரானின் தாக்குதல் திட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில், தங்களின் திட்டம் வெற்றி கண்டுள்ளது என்பதை உணர்ந்துள்ள ஈரான் தற்போது மத்திய கிழக்கு நாடுகளிடம் மன்னிப்புக் கோரியுள்ளது.
மத்திய கிழக்கில் இருந்து தங்களைத் தாக்கினாலொழிய, இனி ஈரான் மத்திய கிழக்கு நாடுகள் மீது தாக்குதல் முன்னெடுக்காது என்றும் ஈரானின் ஜனாதிபதி Masoud Pezeshkian குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே, பொருளாதார ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் அமெரிக்காவிற்கு மத்திய கிழக்கில் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள ஈரான், தற்போது மத்திய கிழக்கு நாடுகளிடம் மன்னிப்புக் கோரியுள்ளது ட்ரம்ப் நிர்வாகம் எதிர்பாராத ஒன்று.

மிக மோசமானதை
ஈரானின் இந்த அதிரடியால் கடும் கோபமடைந்த ட்ரம்ப் தற்போது ஈரானை அவமரியாதை செய்யும் வகையில் பேசியுள்ளார். மத்திய கிழக்கின் தோல்வியுற்ற நாடாக ஈரான் மாறியுள்ளது என்றும் ட்ரம்ப் கொந்தளித்துள்ளார்.
அத்துடன், சனிக்கிழமை மிக மோசமானதை எதிர்பாருங்கள் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். கடுமையான தாக்குதலால், மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஈரான் தற்போது மன்னிப்புக் கோரியுள்ளது என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், மத்திய கிழக்கு அண்டை நாடுகளிடம் ஈரான் சரணடைந்துவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய கிழக்கு நாடுகளை ஈரான் இனிமேல் தாக்காது என்றும் உறுதியளித்துள்ளதன் பின்னணியில், இஸ்ரேலும் அமெரிக்காவும் அளித்த மிக மோசமான பதிலடியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி, மத்திய கிழக்கை கைப்பற்றி, மொத்தமாக ஆட்சி செய்யவும் ஈரான் திட்டமிட்டிருந்தது என்றார். ஈரான் நிபந்தனையற்ற சரணடைந்தால் மட்டுமே போர் முடிவுக்கு வரும் என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப்,
ஈரான் தங்கள் கோரிக்கைகளுக்கு இணங்கி புதிய தலைமையை நிறுவினால் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப உதவுவதாகவும் உறுதியளித்தார்.
இதனிடையே, ஈரான் மக்கள் சரணடைய வேண்டும் என்றால், அது கல்லறையில் மட்டுமே நடக்கும் என ட்ரம்பிற்கு பதிலடி கொடுத்துள்ளார் ஈரான் ஜனாதிபதி Masoud Pezeshkian.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |