சீனாவில் கொரோனாவை தொடர்ந்து மனிதனுக்கு பரவிய புதிய வைரஸ்! பாதிக்கப்பட்ட நோயாளி எப்படி இருக்கிறார்? வெளியான முக்கிய தகவல்
சீனாவில் முதல் முறையாக மனிதனுக்கு பறவை காய்ச்சலின் H10N3 திரிபு தொற்று பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சீனாவின் கிழக்கு மாகாணமான Jiangsu-ன் Zhenjiang நகரில் வசித்து வரும் 41 வயதான நபருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
H10N3 திரிபு தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் மனிதர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சீன தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறித்த நபருக்கு காய்ச்சல் மற்றும் மற்ற அறிகுறிகள் ஏற்பட்டதை தொடர்ந்து ஏப்ரல் 28ம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மே 28ம் திகதி அவருக்கு H10N3 திரிபு வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது என தெரிவித்துள்ளது.
எனினும், அந்த நபருக்கு எப்படி தொற்று பரவியது என்பது குறித்து விவரங்களை தேசிய சுகாதார ஆணையம் தெரிவிக்கவில்லை.
தற்போது பாதிக்கப்பட்ட நபரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில் யாருக்கும் எந்தவித தொற்று பாதிப்பும் ஏற்படவில்லை என சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
2016-2017 ஆம் ஆண்டில் பறவைக் காய்ச்சலின் H7N9 திரிபு பாதிப்பால் சுமார் 300 பேர் உயரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்று முதல் தற்போது வரை எந்த மனிதர்களுக்கு பறவை காய்ச்சல் பரவுவது அரிதாக இருக்கிறது.
இதற்கு முன்னர் உலகில் H10N3 நோய்த்தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை என சீன தேசிய சுகாதார ஆணையம் குறிப்பிட்டுள்ளது.