யானைச் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் இனிப்பு: சர்ச்சையை உருவாக்கியுள்ள உணவகம்
சீனாவின் ஷாங்காயிலுள்ள உணவகம் ஒன்றில், யானைச் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் இனிப்பு ஒன்று பரிமாறப்படும் விடயம் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
யானைச் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் இனிப்பு
சுற்றுச்சுழலுக்கு உகந்த உணவகம் என விளம்பரப்படுத்தப்படும் அந்த உணவகத்தில் வித்தியாசமான ஒரு உணவு பரிமாறப்படுகிறது.
முதலில் ஒரு இலை பரிமாறப்படும், இலையே சாப்பிடுவதற்குத்தான். அந்த இலையை ஒரு சாஸில் தொட்டு சாப்பிடவேண்டும்.
அதற்குப் பின், தேன் மற்றும் மகரந்தத்தில் தோய்த்த ஐஸ் கட்டி, பயங்கர நாற்றமடிக்கும் ஒரு பேஸ்ட் ஆகியவை கொடுக்கப்படும்.
கடைசியாக, யானைச்சாணத்தில் செய்த இனிப்பு. யானைச் சாணத்தை கிருமிநீக்கம் செய்து, அதன்மேல் மூலிகை பெர்ஃபியூம், ஜாம், மகரந்தம் மற்றும் ஒரு தேன் ஐஸ்கிரீம் வைத்து பரிமாறப்படும்.
விடயம் என்னவென்றால், சீனாவில் பிறந்தவர்களே இந்த உணவைப் பார்த்து முகம் சுளிக்கிறார்கள் என்பதுதான்.
அந்த உணவின் விலை 540 டொலர்கள். இலங்கை ரூபாயில் அதன் மதிப்பு 1,61,017.06 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |