இசை கேட்டு பால் குடித்து வளரும் கோழிகள் - அரைகோழி ரூ.5,500க்கு விற்பனை
சீனாவில் இசை மற்றும் பாலில் வளரும் கோழிகள் என கூறி அரை கோழிக்கறி ரூ.5,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அரை கோழிக்கறி ரூ5,500
சீனாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், ஷாங்காய் நகரில் உள்ள ஷாங்காய் கிளப் என்ற உணவகத்தில், அரைக்கோழி கறியை வாங்கி சாப்பிட்டுள்ளார்.
அதற்குரிய விலையாக 66 அமெரிக்கா டொலர் (இந்திய மதிப்பில் ரூ.5,500) செலுத்துமாறு ரசீது வழங்கப்பட்டுள்ளது.
இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், ஏன் இந்த கோழி இசை மற்றும் பாலால் வளர்க்கப்படுகிறதா என கேட்டுள்ளார். அதற்கு உணவக ஊழியர்கள் ஆமாம் என உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும், இது சூரியகாந்தி தோட்டத்தில் வளர்க்கப்படும் அரிய வகை சூரியகாந்தி கோழி என தெரிவித்துள்ளனர்.
சூரியகாந்தி கோழி
இது குறித்து சூரியகாந்தி கோழிப்பண்ணையில் விசாரித்த போது, இந்த சூரியகாந்தி கோழிகள், சூரியகாந்தி தண்டுகள் மற்றும் வாடிய பூக்களின் தலைப்பகுதிகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட சாற்றை உணவாகக் கொடுத்து வளர்க்கப்படுகிறது.
எம்பரர் சிக்கன் என அழைக்கப்படும் இந்த கோழிகள், பாரம்பரிய இசையை கேட்டு வளர்க்கப்படுகிறது. ஆனால் பால் வழங்கப்படுவதில்லை.
சூரியகாந்தி கோழி இன்னும் விலை உயர்ந்தது என்றும், உணவகங்களில் ஒரு முழு சூரியகாந்தி கோழியின் விலை 140 அமெரிக்கா டொலர் (இந்திய மதிப்பில் ரூ.12,000) அதிகமாக இருக்கலாம்" என தெரிவித்துள்ளனர்.
சீனாவின் வேறு பகுதிகளில் வளர்க்கப்படும் கோழிகளை, ஷாங்காயில் வினோத கதைகளை கூறி அதிக விலைக்கு விற்பனை செய்வதாக வாடிக்கையாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கடந்த மார்ச் 14 ஆம் திகதி, இதற்கான ரசீது மற்றும் கோழியின் புகைப்படம் ஆகியவற்றுடன் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |