ஆறாம் தலைமுறை போர் விமானத்தை வெளியுலகிற்கு காட்சிப்படுத்திய சீன இராணுவம்
சீன மக்கள் விடுதலை இராணுவம் (PLA) வெளியிட்ட விளம்பர வீடியோவில், நீண்ட காலமாக வதந்தியாக இருந்த J-36 எனும் ஆறாம் தலைமுறை ஸ்டெல்த் ஜெட் முதன்முறையாக பொதுமக்களுக்கு காட்சியளிக்கப்பட்டுள்ளது.
சீன பாதுகாப்பு அமைச்சகம் இதுவரை அதிகாரப்பூர்வமாக விமானத்தின் அடையாளத்தை உறுதிப்படுத்தவில்லை. ஆனால் பாதுகாப்பு ஆய்வாளர்கள், வீடியோவில் தோன்றிய விமானம் J-36 என நம்புகின்றனர்.
PLA just hinted at the 6th-gen fighter in the video Y-20's 10th anniversary service!
— Li Zexin 李泽欣 (@XH_Lee23) June 28, 2026
"Captain, who are we refueling today?"
"First 'Sixth Master' (H-6), then 'Little Six' (6th-gen)."
The final shot clearly shows the unannounced but well-known 6th-gen jet. pic.twitter.com/dmVdErtXmO
அறிக்கைகளின்படி, AVIC Chengdu உருவாக்கும் J-36, வால் இல்லாத டைமண்ட்-விங் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது அதிக ஸ்டெல்த் திறனை வழங்கும். மற்றொரு மொடலான J-50 விமானம், AVIC Shenyang நிறுவனத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது.

ஆறாம் தலைமுறை விமானங்கள், தற்போதைய ஐந்தாம் தலைமுறை விமானங்களான அமெரிக்காவின் F-35 மற்றும் சீனாவின் J-20-ஐ விட மேம்பட்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில், அதிக ஸ்டெல்த் திறன், நீண்ட தூர இயக்க திறன், அடுத்த தலைமுறை என்ஜின்கள், தன்னாட்சி கொண்ட போர் ட்ரோன்களுடன் இணைந்து செயல்படும் திறன் ஆகியவை அடங்கும்.
அமெரிக்கா, 2028-க்குள் F-47 விமானத்தை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. அதேபோல், பிரித்தானியா, ஜப்பான், இத்தாலி இணைந்து 2035-க்குள் ஆறாம் தலைமுறை விமானத்தை உருவாக்கும் Global Combat Air Programme-ஐ முன்னெடுத்து வருகின்றன.
சீனாவின் இந்த முன்னேற்றம், உலகளாவிய பாதுகாப்புத் துறையில் புதிய போட்டியை உருவாக்கும் என கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |