1000 கிமீ தூரத்தை அடையும் சீன ஹைப்பர்சோனிக் ஏவுகணை: இந்தியா உள்பட பல நாடுகளுக்கு எச்சரிக்கை
சீனா சமீபத்தில் 1000 கிமீ தூரத்தைக் கடக்கக்கூடிய hypersonic air-to-air missile ஒன்றை சோதனை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது Mach 5 வேகத்தை கடந்துவிடும், அதாவது ஒலி வேகத்தைக் காட்டிலும் ஐந்து மடங்கு வேகமாக செல்லும் திறன் கொண்டது.
இந்த ஏவுகணை, எதிரி விமானங்களை ரேடார் சிக்னல் வருமுன்பே தாக்கும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது.
இது stealth fighters, surveillance aircraft போன்ற முக்கிய விமானங்களை குறி வைத்திருப்பதாக சீன ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த வகை ஏவுகணைகள் உலகளவில் “Beyond Visual Range (BVR)” வகையைச் சேர்ந்தவை. இவை எதிர்கால விமானப் போர் தந்திரங்களில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.
தற்போது உலகில் உள்ள நீளத் தூர மிசைல்களில் AIM-174B (அமெரிக்கா) மற்றும் R-37M (ரஷ்யா) ஆகியவை 350–400 கிமீ வரை மட்டுமே செல்லக்கூடியவை.

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு
இந்த புதிய சீன மிசைல் செயல்பாட்டுக்கு வந்தால், இந்தியா, ஜப்பான், தைவான், மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் தங்கள் பாதுகாப்புத் தந்திரங்களை மீளாய்வு செய்ய வேண்டியிருக்கும்.
குறிப்பாக இந்தியா தற்போது Astra Mk-1, Mk-2, Mk-3 ஆகியவற்றில் முன்னேறி வருகிறதாலும், இந்த அட்டகாசமான வளர்ச்சி இந்தியா மீது அழுத்தம் ஏற்படுத்தும்.
இந்த வகை ஏவுகணை எதிரி விமானங்களை, கூடுதல் பாதுகாப்புடன் இருந்தாலும், மிகவும் தூரத்தில் இருந்தே அழிக்கும் திறன் கொண்டது. இதன் தாக்கம் எதிர்கால விமானப் போர்களில் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கக்கூடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
China hypersonic missile 2025, 1000 km air to air missile, Chinese air defense technology, Hypersonic BVR missile China, India vs China missile race, Mach 5 missile development, Air-to-air missile threat, F-22 vs Chinese hypersonic missile, Astra Mk-3 India, East Asia defense escalation