திருமணமாகாத 3.5 கோடி ஆண்கள் - ரஷ்யா, பாகிஸ்தானில் மணப்பெண் தேடும் நாடு!
ரஷ்யா, தென்கிழக்கு ஆசியா, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் சீனாவைச் சேர்ந்த 3.5 கோடி ஆண்கள் மணப்பெண் தேடுகின்றனர்.
ஒரே குழந்தை கொள்கையின் விளைவுகள் சீனாவில் இன்னும் ஆழமாகக் காணப்படுகின்றன.
1979-ல் தொடங்கி 2015-ல் முடிவுக்கு வந்த இந்த கொள்கையால், ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து, தற்போது 3.5 கோடி சீன ஆண்கள் மணமகள்களை தேடிக்கொண்டு இருக்கின்றனர்.
தங்கள் நாட்டில் மணமகள்களை காண முடியாமல், சீன ஆண்கள் வெளிநாடுகளில் மணமகளை தேடி அலைந்து வருகின்றனர்.
ரஷ்யா, பாகிஸ்தான், வியட்நாம், கம்போடியா, பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் மணமகள்களை 'வாங்கும்' (buying brides) முயற்சிகள் தொடர்கின்றன.
பலர் ஓன்லைன் தளங்களின் மூலமாக மணமகள்களைத் தேடுகின்றனர், இதில் சிலர் மோசடி கும்பல்களின் வலைவீச்சிலும் சிக்கி வருகின்றனர்.
மனித கடத்தல் மோசடிகள் அதிகரிப்பு
இந்த வெளிநாட்டு மணமகள் தேடல் சமூகத்தில் மனிதக் கடத்தலுக்கும் வழிவகுத்துள்ளது. பங்களாதேஷ், பாகிஸ்தானில் இருந்து பெண்கள் சீனாவுக்கு சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டு கல்யாணத்திற்கு விற்கப்படுகின்றனர்.
சீன அரசு எச்சரிக்கை
இந்நிலையில், "வெளிநாட்டு மணமகள் வாங்குவது சட்டவிரோதம்" என டாக்காவில் உள்ள சீன தூதரகம் எச்சரித்துள்ளது.
இது சீன சட்டங்களை மீறும் செயல் எனவும், கடுமையாக கையாளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
திருமணம் குறைந்துள்ளது
2024-ல் சீனாவில் 6.1 மில்லியன் திருமணங்கள் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது, இது 2023-ல் இருந்த 7.7 மில்லியனுடன் ஒப்பிடுகையில் பாரிய வீழ்ச்சி. பெண் கல்வி வளர்ச்சி, வேலை வாய்ப்பு, பொருளாதார சுமைகள் ஆகியவை திருமணத்தை தாமதிக்கச் செய்கின்றன.
சமீபத்தில் சீன அரசியல் ஆலோசகர் ஒருவர், திருமண வயதைக் 22-இலிருந்து 18-க்கு குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார், இது ‘மணமகள் நெருக்கடி’ சிக்கலை சமாளிக்க உதவலாம் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
China leftover men bride crisis, Shengnan Shidai China marriage, China one child policy effects, Bride trafficking from Pakistan, Chinese men marrying foreigners, China marriage gender imbalance, Bangladesh girls smuggled to China, China 2025 marriage statistics, China lowers marriage age, Russia brides for Chinese men