சீனாவின் உரிமைகோரலை நிராகரித்த 14 நாடுகளின் கூட்டமைப்பு: சர்வதேச தீர்ப்பை பின்பற்ற அறிவுறுத்தல்
தென் சீனக் கடல் தொடர்பான சீனாவின் உரிமைகோரல்களை 14 நாடுகளின் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.
சீனாவின் உரிமைகோரலை நிராகரித்த 14 நாடுகள்
தென் சீனக் கடல் தொடர்பான சர்வதேச தீர்ப்பின் ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீனாவின் உரிமைகோரல்கள் தொடர்பாக அமெரிக்கா, பிரித்தானியா 14 நாடுகளின் கூட்டமைப்பு முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், தென் சீன கடல் பகுதியில் சீனாவின் விரிவான உரிமைகோரல்களுக்கு எந்தவொரு சட்டப்பூர்வமான முகாந்திரமும் இல்லை என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் கடல்சார் சட்ட ஒப்பந்தத்தின் படி தென் சீன கடல் பிராந்தியத்தின் பெரும்பகுதி சீனாவின் வரலாற்று உரிமை என்பது சர்வதேச சட்டத்திற்கு எதிரானது என்று ஹேக் நகரில் உள்ள நிரந்தர நடுவர் நீதிமன்றம் கடந்த 2016ம் ஆண்டு முக்கிய தீர்ப்பு ஒன்றை வழங்கியது.
நடுவர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மீண்டும் வலியுறுத்தும் விதமாகவே 14 நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பின் இந்த அறிக்கை அமைந்துள்ளது.
14 நாடுகள் கூட்டமைப்பில் உள்ள அமெரிக்கா, பிரித்தானியா, பிலிப்பைன்ஸ், இத்தாலி, எஸ்தோனியா, ஜப்பான், ஆவுஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, லாட்வியா, லிதுவேனியா, ஜேர்மனி, ருமேனியா மற்றும் ஸ்லோவேனியா ஆகியவை 1982ம் ஆண்டின் ஐ.நா சர்வதேச கடல்சார் சட்ட ஒப்பந்தத்தை அனைத்து நாடுகளும் மதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் சட்ட ரீதியான மோதல் தவிர, தென் சீன கடல் பகுதியில் கடலோரக் காவல்படை, ராணுவம் மற்றும் கடல்சார் போராளிகளை பயன்படுத்துதல் ஆகியவை மூலம் பிராந்தியத்தில் ஏற்படும் பதற்றமான சூழ்நிலை குறித்தும் கூட்டமைப்பு நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.
நடுவர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான கடந்த 2016ம் ஆண்டு முதலே இந்த தீர்ப்பு சட்டவிரோதமானது மற்றும் செல்லாது என்று நிராகரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |