விண்வெளி ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கிய சீனா - அச்சத்தில் அமெரிக்கா, இந்தியா
சீனா, விண்வெளியிலிருந்து நேரடியாக ஏவக்கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையை (Hypersonic Missile) உருவாக்கியுள்ளதாக South China Morning Post வெளியிட்ட செய்தி சர்வதேச ரீதியாக கவலை ஏற்படுத்தியுள்ளது.
இது Mach 20 என்ற அதிவேகத்தில் பயணிக்கக் கூடியதாகும் - அதாவது ஒலியின் வேகத்தைவிட 20 மடங்கு அதிகமாக பாயும்.
இந்த ஏவுகணை தொழில்நுட்பம் Hypersonic Glide Vehicle (HGV) என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது இரண்டு கட்டங்களில் செயல்படுகிறது.
முதலில் விண்வெளி நிலையத்திலிருந்து ஏவப்பட்ட பிறகு, பூமியின் வளிமண்டலத்திற்குள் மறுபடியும் நுழைந்து, பிறகு இலக்கை நோக்கி வேகமாக பயணிக்கும்.
இதன் பாதை முற்றிலும் கணிக்க முடியாததால், பொதுவான விமான எதிர்ப்பு அமைப்புகள் இதனை தடுக்கமுடியாது.
சீனா 2010-ல் ஹைப்பர்சோனிக் திட்டத்தை தொடங்கி, 2017-ல் முதல் வெற்றிகரமான சோதனையை நடத்தியது. 2021-ல் கூடுதலான சோதனைகள் நடந்ததுடன், தற்போது அது விண்வெளியில் இருந்து ஏவக்கூடிய ஏவுகணைகளை இயக்கக்கூடிய நிலைக்கு வந்துள்ளது.
இந்த ஆபத்தை எதிர்கொள்வது எப்படி?
இந்த வகை ஆபத்துக்களை எதிர்கொள்வதற்கான ஒரு வழி - விண்வெளி தளங்களிலிருந்து ஏவப்படக்கூடிய ஏவுகணைகளை, அல்லது அந்த விண்வெளி தளத்தையே நாசம் செய்யும் தொழில்நுட்பம்.
இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் ஏற்கனவே ஆண்டி-சாடிலைட் (ASAT) ஆயுதங்களை வைத்துள்ளன.
இந்த வளர்ச்சி இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு புதிய பாதுகாப்பு சவால்களை உருவாக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
China space hypersonic missile, Hypersonic glide vehicle China, Mach 20 missile China, China missile threat to India, Anti-satellite weapons India, Space warfare 2025, China vs India defence tech, Hypersonic missile from space, DRDO anti-satellite weapon, Brahmastra missile China