இனி 3 குழந்தைகள்.... முக்கிய கொள்கையை மாற்றியமைத்தது சீனா! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
திருமணமான தம்பதிகள் இனி 3 குழந்தை வரை பெற்றுக்கொள்ளலாம் என சீனா அறிவித்துள்ளது.
சீனாவில் தற்போது வரை தம்பதிகள் இரண்டு குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கொள்கை அமுலில் உள்ளது.
சமீபத்தில் வெளியான தகவலின் படி, உலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் பிறப்பு எண்ணிக்கை வியக்க வைக்கும் அளவிற்கு சரிந்ததை காட்டியது.
இத்தகவல்களுக்குப் பிறகு, இனி தம்பதிகள் 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என முக்கிய கொள்கையை மாற்றியமைத்துள்ளது சீனா.
ஜனாதிபதி Xi Jinping தலைமையில் நடந்த அரசியல் கூட்டத்தின் போது இந்த மாற்றத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் Xinhua தெரிவித்துள்ளது.
பல ஆண்டுகளாக சீனாவில் அமுல் இருந்து ஒரு குழந்தை கொள்கையை 2016 ஆம் ஆண்டு ரத்து செய்த சீனா, இரண்டு குழந்தை கொள்கையை அமுல்படுத்தியது.
சீன நகரங்களில் குழந்தைகளை வளர்ப்பதற்கான அதிக செலவு ஏற்படும் என்ற அச்சத்தால் பல ஜோடிகள் குழந்தையை தவிர்த்தனர், இதனால் நாட்டின் பிறப்பு எண்ணிக்கை தொடர்ச்சியான சரிவை கண்டது.
பிறப்புக் கொள்கையை மேலும் மேம்படுத்த, சீனா ஒரு திருமணமான தம்பதியினர் மூன்று குழந்தைகளை பெற்றுக்கொள்ளலாம் என்ற கொள்கையை அமல்படுத்தும் என்று Xinhua செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த கொள்கை மாற்றம் பல சலுகைகள் அடங்கியது என Xinhua குறிப்பிட்டுள்ளது. எனினும், சலுகைகளை குறிப்பிடவில்லை.
இந்த அறிவிப்பு சீன சமூக ஊடகங்களில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது, தங்களால் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளையே வளர்க்க முடியவில்லை என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.