தைவான் குறித்து தவறான மற்றும் ஆபத்தான சமிக்ஞைகள் அனுப்பபடுகிறது: அமெரிக்காவை எச்சரித்த சீனா
தைவான் பிரச்சனை என்பது சீன உள்விவகாரம் என அந்த நாட்டின் வெளியுறவு அறிவிப்பு.
அமெரிக்கா மிகவும் தவறான மற்றும் ஆபத்தான சமிக்ஞைகளை அனுப்புகிறது என சீனா குற்றச்சாட்டு
தைவான் நிலைமை குறித்து அமெரிக்கா தவறான மற்றும் ஆபத்தான சமிக்ஞைகளை தெரிவித்து வருவதாக சீனா வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை அறிவித்துள்ளது.
தீவு நாடான தைவானை சீனா தங்கள் சொந்த பிரதேசம் என தெரிவித்து வந்த நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் தைவான் தலைநகர் தைபே-விற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தைவான் கடல் பகுதிக்கு அருகில் சீன கடற்படை போர் பயிற்சியில் ஈடுபட்டது.
EPA
சீனாவின் இந்த போர் பயிற்சிகளை அத்துமீறிய மற்றும் சர்வதேச விதிக்களுக்கு எதிரான நடைமுறை என அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் விமர்சித்து இருந்தன.
மேலும் சமீபத்தில் தைவான் ஜலசந்தி முழுவதும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கனின் தனது கருத்துகளை தெரிவித்து இருந்தார்.
அத்துடன் பிளிங்கன் வெள்ளியன்று நியூயார்க்கில் தனது சீனப் பிரதிநிதி வாங்-யை சந்தித்து, உக்ரைன் ரஷ்யா போரில் ரஷ்யாவை ஆதரிப்பதற்கு எதிராக பெய்ஜிங்கை எச்சரித்தார்.
AP
இந்நிலையில், தைவானின் நிலைமை குறித்து அமெரிக்கா "மிகவும் தவறான மற்றும் ஆபத்தான சமிக்ஞைகளை" அனுப்புகிறது என சீனா குற்றம் சாட்டியுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும் ரஷ்ய படை வீரர்கள்: உக்ரைனிய பகுதிகள் மக்கள் குடியரசு ஆக்கப்படுமா?
இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ தெரிவித்தாக அமைச்சகம் மேற்காட்டிய தகவலில், தைவான் பிரச்சனை என்பது சீன உள்விவகாரம், அதைத் தீர்க்க எந்த முறையைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் அமெரிக்கா தலையிட உரிமை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.