வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும் ரஷ்ய படை வீரர்கள்: உக்ரைனிய பகுதிகள் மக்கள் குடியரசு ஆக்கப்படுமா?
தெற்கு கெர்சன் நகரின் நடுவில் வாக்கு பதிவிற்காக காத்திருக்கும் ரஷ்ய வீரர்கள்.
வீடு வீடாக சென்று வாக்குகளை சேகரிக்கும் ரஷ்ய ஆயுதப்படை வீரர்கள்.
ரஷ்யாவுடன் இணைவதற்கான பொது வாக்கெடுப்புக்காக ரஷ்ய ஆயுதப்படை வீரர்கள் நாட்டின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்குகளை சேகரித்து வருவதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி புடின் கடந்த வாரம் அறிவித்தது போல ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் சுயமான மக்கள் குடியரசு மற்றும் ரஷ்யாவிற்கு தங்கள் குடியரசின் கூட்டாட்சியில் பொருளாக இணைவதை ஆதரிக்கிறீர்களா? என்பது தொடர்பான பொது வாக்கெடுப்பினை நடத்த ரஷ்ய ஆயுத படை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
REUTERS
தெற்கு கெர்சன், ரஷ்ய காவலர்கள் மக்களின் வாக்குகளை சேகரிக்க நகரின் நடுவில் வாக்குப் பெட்டி உடன் காத்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
அத்துடன் மெலிடோபோலில் இரண்டு ரஷ்ய வீரர்களும், இரண்டு உள்ளூர் ஒத்தழைப்பாளர்களும் தனது பெற்றோரின் குடியிருப்பிற்கு வந்து வாக்கெடுப்பிற்கான கையெழுத்தினை கேட்டதாக பெண் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் ரஷ்யாவுடன் சேருவதற்கு என் அப்பா மறுப்பு தெரிவித்தார், எனது அம்மா இதற்கு நாங்கள் மறுப்பு தெரிவித்தால் என்ன நடக்கும் என கேட்டதற்கு ரஷ்ய வீரர்கள் ஒன்றுமில்லை என தெரிவித்துவிட்டு சென்றதாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.
BBC
இதனால் இப்போது ரஷ்யர்கள் எங்களை துன்புறுத்துவார்கள் என எனது அம்மா கவலை கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.
இந்த வாக்கெடுப்பில் நபர் ஒருவருக்கு ஒரு வாக்கு என்பதற்கு பதிலாக குடும்பம் ஒன்றுக்கு ஒற்றை வாக்குச் சீட்டு முறை பயன்படுத்தப்படுவதாகவும் அந்த பெண் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
சாட்சியங்கள் முன் தீர்மானிக்கப்பட்டது என்றாலும், வாக்கெடுப்பில் ஆயுதமேந்திய வீரர்கள் இருப்பது சுதந்திரமான மற்றும் நியாயமான செயல்முறை என்ற ரஷ்யாவின் அறிவிப்புக்கு எதிரானது என கூறப்படுகிறது.
REUTERS
கூடுதல் செய்திகளுக்கு: புலம்பெயர்ந்தவர்கள் படகு சிரியாவில் நீரில் மூழ்கி விபத்து: அதிகரிக்கும் உயிரிழப்பு எண்ணிக்கை
டாஸ் செய்தி நிறுவனத்தின் தகவலின் படி, செப்டம்பர் 27ம் திகதி பிரத்தியேகமான தனிநபர் வாக்கெடுப்பு நடைபெறும் என்றும், மற்ற நாட்களில் வாக்களிப்பு சமூகங்களிலும், வீடு வீடாகவும் ஏற்பாடு செய்யப்படும் என தெரியவந்துள்ளது.