ரஷ்யாவுக்கு ரகசிய ராணுவ பயிற்சி வழங்கிய சீனா: ஐரோப்பிய உளவு அமைப்பு தகவல்
ரஷ்ய வீரர்களுக்கு சீனா ரகசிய இராணுவ பயிற்சி வழங்கி இருப்பதாக ஐரோப்பிய உளவு அமைப்பு தகவல் அளித்துள்ளது.
ரஷ்யாவுக்கு ரகசிய ராணுவ பயிற்சி வழங்கிய சீனா
கடந்த ஆண்டு ரஷ்ய ராணுவ வீரர்களுக்கு சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தினர் ரகசிய ராணுவ பயிற்சி வழங்கியதாக ஐரோப்பிய உளவு அமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த ராணுவ பயிற்சியில் சீனா மற்றும் ரஷ்யாவை சேர்ந்த 4 தளபதிகள் நேரடியாக கலந்து கொண்டு பயிற்சியில் ஈடுபட்டதாகவும் ஐரோப்பிய உளவு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக ரஷ்ய ஆயுதப்படைகளின் பிரதிநிதிகள் குழு சீனாவின் ராணுவ பயிற்சி மையங்களுக்கு சென்று இருப்பதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரி பெலூசோவ் தகவல் தெரிவித்துள்ளார்.
உயிரியல், கதிர்வீச்சு, மற்றும் ரசாயன போர் உத்தி முறைகளை உள்ளடக்கியதாக இந்த ராணுவ பயிற்சி இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் கிட்டத்தட்ட 200 ரஷ்ய ராணுவ வீரர்கள் சீனா பயிற்சி அளித்து இருப்பதாகவும், அவர்களில் சிலர் உக்ரைனில் நடக்கும் போரில் தற்போது களமிறங்கி இருப்பதாகவும் ஐரோப்பிய உளவு அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
உக்ரைனுக்கு எதிரான போர் நடவடிக்கையில் இத்தகைய உயர் பதவியில் இருப்பவர்கள் ஈடுபட்டிருப்பது ஐரோப்பிய நாடுகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |