சீனாவில் சரியும் திருமணங்கள்: இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் அச்சம், குறையும் ஆர்வம்!
சீனாவில் கடந்த 2024 ஆம் ஆண்டில் திருமண நிகழ்வுகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
ஐந்தில் ஒரு பங்கு சரிவுடன், இதுவரை இல்லாத பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இந்த சரிவுக்கு பல்வேறு காரணங்களும் கூறப்படுகின்றன.
மக்கள்தொகை குறைவும் அரசின் முயற்சிகளும்
சீனாவின் மக்கள்தொகை தொடர்ந்து குறைந்து வருகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு, திருமணங்களை ஊக்குவிப்பதோடு, குழந்தை பெற்றுக் கொள்ளவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இருப்பினும், திருமண நிகழ்வுகளில் சரிவு ஏற்பட்டு வருவது நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புள்ளிவிவரங்கள் மற்றும் காரணங்கள்
சீனாவின் சிவில் விவகார அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆண்டில் 6.1 மில்லியன் தம்பதியர் மட்டுமே திருமணம் செய்து கொள்ளப் பதிவு செய்துள்ளனர்.
இது முந்தைய ஆண்டான 2023 இல் 7.68 மில்லியனாக இருந்தது.
குழந்தைப் பராமரிப்பு மற்றும் கல்விச் செலவுகள் அதிகரித்துள்ளதால், திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துவதில் இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்று கூறப்படுகிறது.
மேலும், சீனாவின் பொருளாதார வளர்ச்சி சீராக இல்லாததால், பல்கலைக்கழகப் பட்டதாரிகளுக்கு வேலை கிடைப்பதில் சவால்கள் உள்ளன. அத்துடன் வேலை கிடைத்தவர்களுக்கும் எதிர்காலம் குறித்த அச்சம் நிலவு வருவது காரணமாக கூறப்படுகிறது.
விவாகரத்து அதிகரிப்பு
புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆண்டில் 2.6 மில்லியனுக்கும் அதிகமான தம்பதிகள் விவாகரத்து செய்ய விண்ணப்பித்துள்ளனர். இது 2023 ஆம் ஆண்டை விட 1.1 சதவீதம் அதிகமாகும்.
விளைவுகள்
திருமண நிகழ்வுகள் குறைவது மற்றும் விவாகரத்து அதிகரிப்பது சீனாவின் சமூக மற்றும் பொருளாதாரத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
இது நாட்டின் மக்கள்தொகை மேலும் குறைய வழிவகுக்கும். இதன் விளைவாக, தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |