ஆயுத உதவி அளித்த அமெரிக்கா... ஒரே நாளில் தைவானை மொத்தமாக சூழ்ந்து மிரட்டிய சீனா
போர் விமானங்கள் மற்றும் கடற்படைக் கப்பல்களை வியாழக்கிழமை ஒரே நாளில் தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் சீனா நிலைநிறுத்தியதாக தைவான் தெரிவித்துள்ளது.
இந்த மிரட்டல் நடவடிக்கை
அமெரிக்கா முதல் முறையாக இராணுவ உபகரணங்களை தைவானுக்கு அளிப்பதாக அறிவித்த சில வாரங்களுக்குப் பிறகு சீனா இந்த மிரட்டல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
@getty
மொத்தம் 68 போர் விமானங்கள், 10 கடற்படைக் கப்பல்கள் என தைவானை முற்றுகையிட்டதாக கூறப்படுகிறது. தங்கள் வான் எல்லை அருகாமையில் சீனாவின் 35 போர் விமானங்கள் அத்துமீறியதாக தைவான் புகார் தெரிவித்திருந்த அடுத்த நாள், மொத்தமாக 68 போர் விமானங்களை சீனா அனுப்பி வைத்துள்ளது.
தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்றே நீண்ட காலமாக சீனா கூறி வருகிறது. தைவான் சுதந்திரம் பெற்றதில் இருந்து இரு நாடுகளின் உறவும் மோசமடைந்து வந்துள்ளது.
@epa
இராணுவ வன்பொருள் பரிமாற்றம்
தைவான் ஜனாதிபதியாக 2016ல் Tsai Ing-wen பொறுப்புக்கு வந்த பின்னரே, தைவான் மீது இராணுவ மற்றும் அரசியல் அழுத்தத்தை சீனா அதிகரித்தது. ஆனால் நீண்ட காலமாக தைவான் ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது.
மட்டுமின்றி, கடந்த மாதம், ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் தைவானுக்கு 80 மில்லியன் டொலர் இராணுவ வன்பொருள் பரிமாற்றத்தை அறிவித்தது.
@reuters
இந்த நிலையிலேயே, உள்ளூர் நேரப்படி காலை 6 மணி தொடக்கம் போர் விமானங்கள், கடற்படைக் கப்பல்கள் என தீவை முற்றுகையிட்டதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |