60,000 கோடி செலவில்…350 கி மீ வேகத்தில் செல்லும் அதிவிரைவு ரயில்: இந்தோனேசியாவில் தொடக்கம்
மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய அதிவிரைவு ரயில் சேவை இந்தோனேசியாவில் தொடங்கப்பட்டுள்ளது.
350 கி மீ வேகம்
இந்தோனேசியாவில் சுமார் அறுபதாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள அதிவேக ரயில் சேவை சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
சீன நிதி உதவியுடன் கட்டப்பட்டுள்ள இந்த ரயில் பாதை, இந்தோனேசியாவின் ஜாவா தீவின் தலைநகர் ஜகார்த்தா-வை படுங் நகருடன் இணைக்கிறது.
CRRC
இந்த அதிவேக விரைவு ரயில் சுமார் மணிக்கு 350 கி மீ வேகத்தில் செல்லக் கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுவே தென் கிழக்கு ஆசியாவிலேயே அதிவிரைவு ரயில் பாதை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த அதிவேக விரைவு ரயிலில் வெறும் 40 நிமிடங்களில் 143 கி மீ தூரத்தை கடக்க முடியும் என தெரிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
AFP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |