எதிர்பாராத விதமாக எலான் மஸ்குக்கு சீனாவிலிருந்து குவியும் ஆதரவு
திடீர் காதலர்கள் போல எங்கு சென்றாலும் இணைந்தே காணப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கோடீஸ்வரர் எலான் மஸ்க் உறவு பிரிந்துள்ள நிலையில், எதிர்பாராதவிதமாக, சீனாவிலிருந்து எலான் மஸ்குக்கு ஆதரவு குவிகிறது.
எலான் மஸ்குக்கு சீனாவிலிருந்து குவியும் ஆதரவு
ஆம், எக்ஸுக்கு இணையாக சீனாவில் பிரபலமான சமூக ஊடகமான Weiboவில் எலான் மஸ்குக்கு ஆதரவாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
#MuskWantsToBuildAnAmericaParty என்னும் ஹேஷ்டேக் வைரலாகியுள்ளது. அது, 37 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
சகோதரர் எலான் மஸ்க் அவர்களே, எங்கள் தரப்பிலிருந்து உங்களுக்கு ஆதரவாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இருக்கிறோம் என்கிறார் சீன நாட்டவர் ஒருவர்.
இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், சீனாவில் ஓடும் மேற்கத்திய நாட்டு தயாரிப்பான ஒரே வாகனம் எலான் மஸ்கின் டெஸ்லா மின்சார கார்கள்தான்.
அத்துடன், எலான் மஸ்க், சீன பிரீமியரான Li Qiangஉடன் நெருக்கமான நட்பு வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |