அரிய பூமி கனிமங்களை பதுக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சீனா எச்சரிக்கை
அரிய பூமி கனிமங்களை பதுக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரிய பூமி கனிமங்களின் (Rare Earth Minerals) உற்பத்தி மற்றும் செயலாக்கத்தில் சீனா ஆதிக்கம் செலுத்திவருகிறது. இந்த கனிமங்கள், மின்னணு, ஆட்டோமொபைல், பாதுகாப்பு தொழில்நுட்பங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது.
சீன அரசு தற்போது வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த கனிமங்களை இறக்குமதி செய்து பதுக்கி வைப்பதை தடுக்கும் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இது விநியோக கட்டுப்பாடுகளை ஏற்படுத்தும் அபாயத்தை குறைக்கும் நோக்கத்துடன் செய்யப்படுகிறது.
பாரிய அளவில் அரிய பூமி கனிமங்களின் கையிருப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு எதிராக ஏற்றுமதி கட்டுப்பாடுகளை கடுமையாக அமுல்படுத்திவருகிறது.
ஏற்கெனவே ஏழு வகை அரிய கனிமங்களை ஏற்றுமதி கட்டுப்பாட்டு பட்டியலில் சேர்த்துள்ளது. இது அமெரிக்காவுடனான வர்த்தக மோதலின் ஒரு பகுதியாகவும் பார்க்கப்படுகிறது.
சீனாவின் இந்த நடவடிக்கைகள், வெளிநாட்டு நிறுவனங்களை சீனாவுக்குள் தயாரிப்பு மையங்களை அமைக்க தூண்டிவருகிறது.
சில அமெரிக்க நிறுவனங்கள் சீனாவுக்குள் உற்பத்தி மையங்களை மாற்றியுள்ளன. இது சீனாவுக்கு விநியோக சங்கிலியை கட்டுப்படுத்த உதவுகிறது.
சீனாவின் இந்த கொள்கை, உலக அரிய கனிமங்கள் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
China rare earth crackdown, US China Trade War, China Warns foreign companies, Rare Earth supply chain, China Rare earth Minerals