சீனாவில் வெளிநாட்டு பயணங்களுக்கு கட்டுப்பாடு - புதிய பயண விதிகள் அமுல்
China tightens tech security travel rules: சீனாவில் வெளிநாட்டு பயணத்தில் கடும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
சீனாவில் இன்று முதல் (செப்டம்பர் 15, 2026) புதிய நுழைவு மற்றும் வெளியேறும் விதிகள் அமுலுக்கு வந்துள்ளன. இந்த விதிகள், தேசிய தொழில்நுட்ப பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக கருதப்படும் சீன குடிமக்கள் வெளிநாடு செல்லத் தடை விதிக்கின்றன.

முன்னதாக, சீனர்கள் பொதுவாக சுதந்திரமாக வெளிநாடு பயணம் செய்ய முடிந்திருந்தாலும், அரசாங்கம் எப்போதும் பாதுகாப்பு அபாயம் உள்ளவர்களின் பயணங்களை கண்காணித்து வந்தது.
புதிய விதிகளின்படி, ஏற்றுமதி கட்டுப்பாடுகள் அல்லது தொழில்நுட்ப இறக்குமதி-ஏற்றுமதி விதிகளை மீறுவோருக்கு தடை விதிக்கப்படும். இந்த தடை, குறைந்தது ஆறு மாதம் முதல் மூன்று ஆண்டுகள் வரை நீடிக்கலாம்.
வெளிநாட்டில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு, தேசிய பாதுகாப்பிற்கு கேடு விளைவித்தவர்கள் சீனாவுக்கு திரும்பிய பின் வெளிநாடு செல்ல முடியாது.
வெளிநாட்டவர்கள் கூட, விசா விண்ணப்பத்தில் தவறான தகவல் அளித்தால், ஓராண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சீனாவிற்குள் நுழையத் தடை விதிக்கப்படலாம்.
முன்னதாக, சீன அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு வெளிநாட்டு பயணத்தில் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
2023-இல், அரசு ஊழியர்கள் மற்றும் அரசு தொடர்புடைய நிறுவன ஊழியர்களுக்கு தனிப்பட்ட வெளிநாட்டு பயணத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
சமீபத்தில், அமெரிக்க நிபுணர் மின் சின், சீனாவில் தேசிய பாதுகாப்பு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தவறாக தடுத்து வைக்கப்பட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.
இந்த புதிய விதிகள், தைவான் மக்களிடையே பெரும் கவலை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, தொழில்நுட்ப துறையில் பணிபுரியும் தைவான் குடிமக்கள் சீனாவிற்கு செல்லும்போது கூடுதல் அபாயம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீனா, இந்த விதிகள் தைவான் மக்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பை வழங்கும் என தெரிவித்துள்ளது.
மிகப்பெரிய சந்தையாக உருவெடுக்கும் சொகுசு பதுங்குகுழிகள் - 2035-க்குள் 10 பில்லியன் டொலர் மதிப்பை எட்டும்
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |