ஐரோப்பாவிற்கு சிப் ஏற்றுமதி தடையை தளர்த்த முடிவு செய்த சீனா: விரிவான பின்னணி
நெக்ஸ்பீரியா நிறுவனத்தை டச்சு அதிகாரிகள் கையகப்படுத்திய நிலையில், ஐரோப்பாவுக்கான சிப் ஏற்றுமதி தடையை தளர்த்துவதாக சீனா தெரிவித்துள்ளது.
மறு ஏற்றுமதி
நெதர்லாந்தில் செயல்பட்டுவரும் சீனாவுக்கு சொந்தமான சிப் தயாப்பு நிறுவனமாகும் நெக்ஸ்பீரியா. இந்த நிலையில், கடுமையான நிர்வாக குறைபாடுகளைக் காரணம் காட்டி செப்டம்பரில் Nexperia நிறுவனத்தைக் கையகப்படுத்த பனிப்போர் காலச் சட்டத்தை நெதர்லாந்து நிர்வாகம் பயன்படுத்தியது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஐரோப்பாவிற்கு முழுமையாக முடிக்கப்பட்ட நெக்ஸ்பீரியா சிப்களை மறு ஏற்றுமதி செய்யப்போவதில்லை என்று சீனா கூறியது கார் தயாரிப்பாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது.
நெதர்லாந்தில் தயாரிக்கப்படும் சுமார் 70 சதவீத சிப்கள் சீனாவிற்கு அனுப்பப்பட்டு, அங்கே முழுமையாக முடிக்கப்பட்டு பிற நாடுகளுக்கு மறு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இதனிடையே, சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், நிறுவனங்களின் உண்மையான நிலைமையை விரிவாகக் கருத்தில் கொண்டு, அளவுகோல்களை பூர்த்தி செய்யும் ஏற்றுமதிகளுக்கு சீனா விலக்குகளை வழங்கும் என்று கூறியது.

நடவடிக்கையே காரணம்
இருப்பினும் அது எந்த அளவுகோல் என்பதை சீனா அந்த அறிக்கையில் குறிப்பிடவில்லை. மட்டுமின்றி, நிறுவனங்களின் உள் விவகாரங்களில் முறையற்ற தலையீடு செய்வதாக நெதர்லாந்து நிர்வாகத்தையும் சீனா விமர்சித்துள்ளது.
அத்துடன் உலகளாவிய உற்பத்தி மற்றும் விநியோகத்தில் தற்போதைய சீர்குலைவுக்கு நெதர்லாந்தின் நடவடிக்கையே காரணம் என்றும் குற்றம் சாட்டியது.

உண்மையில், இந்த வார தொடக்கத்தில் தென் கொரியாவில் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜி ஜின்பிங் சந்தித்த பிறகு, ஏற்றுமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக சீனாவின் அறிக்கை வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |