ஜேர்மனியின் முக்கிய வர்த்தக கூட்டாளியாக அமெரிக்காவை விஞ்சிய சீனா
ஜேர்மனியின் முக்கிய வர்த்தக கூட்டாளியாக சீனா முன்னிலை பெற்றுள்ளது.
2025-ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில், சீனா ஜெர்மனியின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக அமெரிக்காவை முந்தியுள்ளது.
ஜேர்மன் புள்ளிவிவர அலுவலகத்தின் தரவுகளின்படி, ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை சீனாவுடன் ஜேர்மனியின் வர்த்தக அளவு 190.7 பில்லியன் டொலராக உள்ளது.
இதே காலத்தில் அமெரிக்காவுடன் 189 டொலர் மதிப்பில் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.
2024-ல் ஜேர்மனியின் முக்கிய வர்த்தக கூட்டாளியாக இருந்த அமெரிக்கா, டொனால்டு ட்ரம்ப் மீண்டும் பதவியேற்றதையடுத்து விதிக்கப்பட்ட வரி நடவடிக்கைகளால் அந்த நிலையை இழந்துள்ளது.
ஜேர்மனியின் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 2025-இல் 7.4 சதவீதம் குறைந்துள்ளது; ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 23.5 சதவீதம் குறைந்துள்ளது.
BGA வெளிநாட்டு வர்த்தக சங்கத் தலைவர் டிர்க் ஜாண்டுரா, “அமெரிக்க வரி மற்றும் வர்த்தக கொள்கைகள் ஜேர்மனியின் விற்பனை குறைவுக்கு முக்கிய காரணம்” என தெரிவித்துள்ளார்.
கார்கள், இயந்திரங்கள், வேதியியல் பொருட்கள் போன்ற பாரம்பரிய ஜெர்மன் ஏற்றுமதி பொருட்களுக்கு அமெரிக்காவில் தேவை குறைந்துள்ளது.
சீனாவுக்கான ஜேர்மன் ஏற்றுமதியும் 13.5 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் சீனாவிலிருந்து இறக்குமதி 8.3 சதவீதம் உயர்ந்துள்ளது.
இது “dumping price” எனப்படும் குறைந்த விலையில் சீன பொருட்கள் அதிகளவில் ஜேர்மனிக்கு வருவதால், உள்ளூர் தொழில்துறைக்கு அழுத்தம் ஏற்படுகிறது. இந்த மாற்றம், ஜேர்மனியின் பொருளாதார திசையை மாற்றும் முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |