சீனப் பெருஞ்சுவர் முதல் விக்டோரியா சிகரம் வரை…சீனாவின் டாப் 5 சுற்றுலா தளங்கள்
உலக வரலாற்றில் மிகப்பெரிய பாரம்பரியமும் வரலாற்று பின்னணியும் கொண்ட நாடுகளில் சீனா தனக்கான இடத்தை பெற்றுள்ளது.
இத்தகைய பாரம்பரியம் கொண்ட சீனா அதிநவீன நவீனத்துவமும், நம்ப முடியாத மிகப்பெரிய பயண அனுபவங்களையும் கொண்டதாக உள்ளது.
சீனாவின் டாப் 5 சுற்றுலா தளங்கள்
முடியன்யு சீனப் பெருங்சுவர்(Mutianyu Great Wall)
முடியன்யு-வில் உள்ள சீனப் பெருஞ்சுவர் சீன பேரரசின் கலாச்சாரத்திலும் வரலாற்றிலும் மிகப்பெரிய சான்றாக இன்று வரை திகழ்ந்து வருகிறது.

இந்த சீனப் பெருஞ்சுவர் கி.பி 1368 இல் பேரரசர் சூ யுவான்சாங்கின் தலைமை தளபதி ஜெனரல் சூ டா என்பவரால் கட்டப்பட்டுள்ளது.
சீனாவின் கிழக்கு Gubeikou மற்றும் மேற்கில் உள்ள Juyongguan ஆகியவற்றை இணைக்கும் இந்த சீனப் பெருஞ்சுவர் தலைநகரை காக்கும் மிகப்பெரிய அரணாக இருந்து வந்துள்ளது.
அடர்த்தி நிறைந்த கண்காணிப்பு கோபுரங்கள், தனித்துவமான பக்கவாட்டு துளைகள் மற்றும் சிக்கலான உட்புறம் மற்றும் வெளிப்புற கிளை அமைப்புகள் இதன் சிறப்பம்சங்களாக உள்ளன.
சீனப் பெருஞ்சுவர் 98% தாவரங்கள் நிறைந்த பசுமையான போர்வையைக் கொண்டுள்ளது.
உலக அதிசயங்களில் ஒன்றாக பார்க்கப்படும் சீனப் பெருஞ்சுவர் 2011ம் ஆண்டில் சீனாவின் தேசிய ரம்மியமான இடங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
தி பண்ட் (The Bund Wai Tan)
ஹுவாங்பு நதிக்கரையில் அமைந்துள்ள தி பண்ட் அல்லது வான் டான் என்பது நீர் வழியோர நடைபாதை ஆகும்.

இந்த பகுதி நியோ-கிளாசிக்கல் கட்டிடக்கலை சுற்றுலாப் பயணிகளுக்கு காண்பிக்கிறது.
இப்பகுதியில் ஒன்று இணையும் சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்கள் மற்றும் கடைக்காரர்கள் இப்பகுதியை துடிப்பான சூழ்நிலையாக உருவாக்குகின்றனர்.
விக்டோரியா சிகரம்(Victoria Peak)
பரந்த வானளாவிய காட்சிகளை காட்டும் விக்டோரியா சிகரம், ஹாங்காங்கில் அதிக சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாக உள்ளது.

சுற்றுலாப் பயணிகள் பீக் டவர் மற்றும் பீக் டிராம் ஆகியவற்றால் அதிகமாக இப்பகுதிக்கு ஈர்க்கப்படுகிறார்கள்.
பீக் டிராம் ஹாங்காங்கின் பழமையான மற்றும் பிரபலமான பொதுப் போக்குவரத்து வடிவமாக உள்ளது.
ஹாங்காங் டிஸ்னிலேண்ட்(Hong Kong Disneyland)
ஹாங்காங் டிஸ்னிலேண்ட்-டில் உள்ள தனித்துவமான 7 கருப்பொருள் காட்சிகளான, Adventureland, grizzly gulch, mystic point, toy story land, fantasyland, tomorrowland மற்றும் Main street u.s.a ஆகியவை சுற்றுலாப் பயணிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை ஏற்படுத்தி தருகிறது.

இது எல்லா வயதுடைய பார்வையாளர்களுக்கும் புதுவித அனுபவத்தை ஏற்படுத்தி தருகிறது.
யூ தோட்டம்(You Garden -Yuyuan)
யூ தோட்டம் சீன தோட்டக்கலையின் கன்னி உதாரணமாகும்.
இப்பகுதியில் இடம்பெற்றுள்ள அமைதியான குளங்கள், பழங்கால பாறை அமைப்புகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

பான் யுந்துவான் என்ற அரசு அதிகாரி இந்த தனியார் தோட்டத்தை தனது குடும்ப நேரத்தை மகிழ்ச்சியாக கொண்டாட உருவாக்கியுள்ளார்.
இதன் கட்டுமான பணி 1577 ம் ஆண்டு மிங் வம்சத்தின் போது நிறைவடைந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |