ஏவுகணை பாதுகாப்பு அமைப்பில் அமெரிக்காவை வீழ்த்திய சீனா
ஏவுகணை பாதுகாப்பு அமைப்பில் அமெரிக்காவை சீனா வீழ்த்தியுள்ளது.
சீனா, உலகளாவிய அளவில் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை உருவாக்கிய முதல் நாடாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது.
Golden Dome என அழைக்கப்படும் புதிய பாதுகாப்பு அமைப்பின் மாதிரி வடிவம் தற்போது பரிசோதனையில் உள்ளது.
இது உலகின் எந்த மூலையிலிருந்தும் சீனாவை நோக்கி ஏவப்படும் 1000 ஏவுகணைகளை ஒரே நேரத்தில் கண்காணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு விண்வெளி, கடல், வானம் மற்றும் நிலத்தில் உள்ள சென்சார்கள் மூலம் தகவல்களை சேகரித்து, நேரடி கண்காணிப்பு மற்றும் பகுப்பாய்வை மேற்கொள்கிறது.
Nanjing ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள், இந்த பாதுகாப்பு அமைப்பு குறித்து Modern Radar என்ற சீன அறிவியல் இதழில் வெளியிட்டுள்ளனர்.
மேலும், பல்வேறு வடிவங்களில் உள்ள பல வெவ்வேறு விதமான எச்சரிக்கை தரவுகளை ஒருங்கிணைத்து, PLA தலைமையகத்திற்கு மையமாக்கப்பட்ட தகவல்களை வழங்கும் திறனும் இதில் உள்ளது.
உண்மையான ஆயுதங்களை போலியானவற்றிலிருந்து வேறுபடுத்தி, ஏவுகணையின் வகை மற்றும் ஒளி பாதையை கண்காணித்து தடுப்பு நடவடிக்கைகளை வழிநடத்தும் திறனும் இதில் உள்ளது.
இந்த முன்னேற்றம், அமெரிக்காவின் 1983-ஆம் ஆண்டு ரொனால்டு ரீகன் முன்மொழிந்த "Star Wars" திட்டத்தையும், 2025-ல் டொனால்டு ட்ரம்ப் முன்மொழிந்த "Golden Dome" திட்டத்தையும் நினைவுபடுத்துகிறது.
ஆனால், அமெரிக்காவின் திட்டங்கள் இன்னும் செயல்படுத்தப்படாத நிலையில், சீனாவின் மாதிரி அமைப்பு செயல்பாட்டில் இருப்பது, அதன் தோஹழில்நுட்ப முன்னேற்றத்தையும், உலகளாவிய பாதுகாப்பில் அதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
China missile defence system, Golden Dome prototype, global missile shield, PLA radar technology, US vs China defence race, strategic deterrence China, distributed early warning system, Modern Radar China, Trump Golden Dome project, global threat interception